Latest News

 • விஜய் கட்சியுடன் கூட்டணி! செல்லூரார் ‘காமெடி’ பேட்டி..!
  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பேசுவதும், பதிவிடுவதும், அப்புறம் நீக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணி குறித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை துவரிமான் அருகே நாக தீர்த்தத்தில் உள்ள ஓடையின் குறுக்கே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில்,” அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை. […]
 • திமுக கொண்டாட்டம்! மக்கள் திண்டாட்டம்! அண்ணாமலை அட்டாக்!
  ரேசன் கடைகளில் தற்போது வரை பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படாததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த மே மாதம் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை வழங்காமல் புறக்கணித்த திமுக அரசு, தற்போது இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் முழுமையாக அவற்றை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த […]
 • தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி! எல்.முருகன் பெருமிதம்..!
  தமிழகத்தில் பா.ஜ.க,வின் வளர்ச்சி ‘அசுர வளர்ச்சி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘‘தங்களுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்துள்ளார். பிரியங்கா போட்டியிடுவார் என்பது தெரிந்த விஷயமே. இது எதிர்பார்த்த ஒன்று தான். தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி மிகப்பெரியது. அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்’’ […]
 • சொத்து குவிப்பு வழக்கு! ஜூலை 22க்கு ஒத்திவைப்பு!
  சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 1996-&2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு […]
 • விக்கிரவாண்டி தேர்தல்! விஜய் யாருக்கு ஆதரவு..?
  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமான நிலையில் அந்த தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆதரிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
 • மஸ்தானுக்கு மீண்டும் பதவி! ஸ்டாலின் மனம் மாறிய பின்னணி?
  அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த […]
 • அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு சரி! மதுரை ஆதீனம் கருத்து!
  ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது சரிதான்’ என்ற தொணியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் தெரிவித்ததாவது, ‘‘கோவில் […]
 • அதிமுக தேர்தல் புறக்கணிப்பு! காரணங்களை அடுக்கிய ஆர்.எஸ்.பாரதி!
  விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கான காரணங்கள் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார். இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘விக்ரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது. அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. ஈரோடு இடைத் தேர்தலில் ஆடு, மாடுகளை போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து தி.மு.க. கையாண்ட முறையை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே. […]
 • தொடரும் மணல் கடத்தல்! உயிர் பயத்தில் அதிகாரிகள்! அன்புமணி கண்டனம்!
  மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளை கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் […]
 • தலைமை இல்லாமல் தடுமாறும் அதிமுக! கார்த்தி சிதம்பரம் கருத்து!
  “சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி ஈதுக்கா மைதானத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் எப்போதும் மத ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கும். நீட் ஒரு மோசடி […]
 • பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து!
  மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி வருகிற 20ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தமிழகத்தில் பாஜகவால் வாக்கு சதவீதத்தை மட்டுமே அதிகரிக்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. ஆனால் பிற மாநிலங்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரதமராக 3வது முறையாக மோடி […]
 • பிரபல இயக்குநருக்கு பிரபல நடிகை அவதூறு நோட்டீஸ்!
  ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர், இந்தி நடிகை ஜீனத் அமனுடன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர், ‘ஷோ ஸ்டாப்பர்’. மணீஷ் ஹரிசங்கர் தயாரித்து, இயக்கியுள்ளார். இவர், சமீபத்தில் இந்த வெப் தொடரை வழங்குவதற்கு நடிகர் அக்‌ஷய் குமாரிடம் தான் பேசுவதாகவும். இதற்காக தனக்கு ரூ.75 லட்சமும் அக்‌ஷய் குமார் பெயரில் ரூ.6 கோடியும் வேண்டும் என்று […]
 • 2026ல் ஸ்டாலின் கனவு பலிக்காது! இ.பி.எஸ். ஆவேசம்..!
  2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது கனவு அவரின் கனவு பலிக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக அதையே செய்யும். இடைத்தேர்தல் சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால் […]
 • இடைத்தேர்தல் புறக்கணிப்பு! ‘மேலிட’ உத்தரவு! பகீர் கிளப்பிய பா.சி!
  விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிடத்தின்’ உத்தரவே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு அக்கட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு அக்கட்சி எடுத்துள்ள முடிவே தெளிவான சான்று. […]
 • திருப்பத்தூரில் சிக்கிய சிறுத்தை எங்கிருந்து வந்தது?
  திருப்பத்தூர் மக்களை 9 மணி நேரமாக அச்சத்தில் வைத்திருந்த சிறுத்தை நள்ளிரவு 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் அந்த சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் சிறுத்தை புகுந்த தகவலால் அச்சம் ஏற்பட்டது. […]
 • விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பா.ம.க. மாஸ் வியூகம்..!
  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததால், மும்முனைப் போட்டி உறுதியாகியிருக்கிறது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த திமுகவுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், “கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு எங்களுக்கு […]
 • 2026லும் திமுகதான்! அதிமுகவுக்கு வாய்ப்பே இல்லை! முத்துசாமி சவால்!
  ‘‘முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள். 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்காது’’ என தி.மு.க. அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு செய்கின்ற பணி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ […]
 • பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!
  பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே போலீசார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் அவர் பரப்பன அக்ரஹாரா […]
 • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : போட்டியிட தயாராக உள்ள பா.ம.க..!
  விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார். அதோடு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் 7 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகளை […]
 • பாலியல் புகார் : எடியூரப்பாவிற்கு ஜாமினில் வர முடியாத கைது வாரண்ட்..!
  17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார். சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை. இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரண்ட்-ஐ பிறப்பித்துள்ளது. […]
 • ஈர்க்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் மக்களுக்கு பயன் தராத விளம்பரப் பூ : டி.டி.வி…!
  தொழிற்துறையில் பெறப்பட்ட முதலீடுகளின் தற்போதைய நிலை என்ன என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீடுகளும் அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தமிழக அரசு செய்திக் […]
 • அமித் ஷா -அண்ணாமலைக்கு நாடார் சங்கம் கண்டனம்!
  பொது மேடையில் தமிழிசையை அவமதித்த அமித் ஷாவுக்கு நாடார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது போன்ற போஸ்டர் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் […]
 • விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் களம் இறங்க போகும் வேட்பாளர் யார்..?
  விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான தி.மு.க. முதல் ஆளாக களம் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார். தி.மு.க.வுக்கு போட்டியாக அ.தி.மு.க., பா.ம.க. சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது. தி.மு.க. சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
 • குவைத் தீவிபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் அறிவிப்பு..!
  குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 […]
 • ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வரின் வாழ்த்து..!
  “உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஆந்திர பிரதேச மாநில முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் […]
 • கலைந்த கர்ப்பம்! கண்டிசன் போட்ட கணவர்! மனம் திறந்த நமீதா!
  நடிகை நமீதா தான் முதன் முறை கர்ப்பமானபோது நான்கே மாதங்களில் கர்ப்பம் கலைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். கோலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நமீதா. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சியாக நடித்து பேமஸ் ஆன நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற நமீதா, அதில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். அதுமட்டுமின்றி அரசியலிலும் ஆர்வமுடன் […]
 • தமிழிசையை எச்சரித்த அமித்ஷா? பாஜகவில் சூடுபிடித்த மோதல்!
  தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பில் கலந்துகொண்ட அமித்ஷா மேடையிலேயே தமிழிசையை எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தென்சென்னையில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக சில கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜகவிலேயே சமூக வலைதளப் […]
 • விக்கிரவாண்டியில் பாமக போட்டி! பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை!
  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமக, கூட்டணியில் உள்ள பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த புகழேந்தி. மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். ஏப்ரல் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக […]
 • ஆந்திர துணை முதல்வராகும் பவன் கல்யாண்!
  சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். […]
 • ஜூன் 24ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர்!
  வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் […]
 • 2026… திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் காங்.!
  ‘எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?’ என காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சால் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: ‘‘தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் […]
 • மா.செ.பதவி! மஸ்தானுக்கு கல்தா! என்ட்ரி கொடுத்த வாரிசு!
  திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால் கட்சிப் பணிகள் நடந்திட கௌதம்சிகாமணி விழுப்புரம் […]
 • ‘நீட்’ கவுன்சிலிங்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
  ‘நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக சுமார் 10 பேர் கடந்த ஜூன் 1-ம் தேதி வழக்கு தொடுத்தனர். தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர். கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு […]
 • சபாநாயகர் பதவி… சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. செக்..!
  சபாநாயகர் பதவி விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. செக் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகியுள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் கூட்டணி ஆட்சியே அமைந்துள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணி […]
 • சேலத்தில் முடங்கிய எடப்பாடி? வெளியான பின்னணி தகவல்கள்!
  அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். பெங்களூரூ புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றையே அமைத்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனமாக சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இதுவரை விளக்கம் கேட்கவில்லை. இதற்கான பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. இதனால் அதிமுகவில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. […]
 • ‘என் உடலில் அதிமுக ரத்தம்! ஓபிஎஸ் ஓபன் டாக்..!
  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நான்கு பிளவாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. தேர்தலில் வாக்குகள் ஒன்றிணைக்க முடியாமல் சிதறுவதால் அதிமுக கடந்த 8 தேர்தலிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி […]
 • நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு நல்வாழ்த்துக்கள் : ப.சிதம்பரம்..!
  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதையடுத்து, ஜானதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். […]
 • பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி..!
  இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், நேற்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி […]
 • யார் யாருக்கு எந்தெந்த இலாக்காக்கள்..? NDA கூட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள புதிய மந்திரிகள்..!
  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இன்று நடைபெறவுள்ள என்.டி.ஏ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை […]
 • ‘அடுத்த முறையும் நீங்கள்தான்!’ நிதிஷ் – நாயுடு உறுதி..!
  “நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பேன்” என்று ஐக்கிய ஜனத தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உறுதி அளித்து பாஜக கூட்டணி ஆட்சிக்கான புதிய நம்பிக்கையைப் பாய்ச்சியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ் குமார் கட்சி மாறியது ஐந்து முறை. அதனால் இப்போதும் ஒருவேளை அவர் கட்சி மாறலாம் என்ற ஊகங்களுக்குக் குறைவில்லாமல் செய்திகள் உலா வந்தன. ‘பல்டி குமார்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு என்பதால் 6வது முறை பல்டி எப்போது என்றே […]
 • நாளை எம்.பி.க்கள் கூட்டம்! ஜூன் 24ல் சட்டப்பேரவை கூட்டம்!
  தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வர் […]
 • தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்! பிரதமர் மோடி பெருமிதம்!
  தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார். என்.டி.ஏ கூட்டனியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நரேந்திர மோடியின் பெயரை முதலில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கால் முன்மொழிந்தார். பின்னர் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் அதனை ஆதரித்தனர். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். […]
 • ‘ஜெயலலிதா இல்லம்’ வரவேற்கிறது! சசிகலா திடீர் அழைப்பு!
  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நிலையில், ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒன்றிணைவோம் வாருங்களே’ என சசிகலா திடீர் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய சகாப்தம் படைப்போம்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் […]
 • எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறாரா செல்லூர் ராஜூ..?
  அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மா.செ.வுமான செல்லூர் ராஜு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின் போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளது புரியாத புதிராக உள்ளது. அதிமுக தலைமை இண்டியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிற நிலையில், செல்லூர் ராஜு திடீரென […]
 • ஒய்.ஜி மகேந்திரனின் சீல் வைத்த வீட்டில் 30 லட்ச ரூபாய் பொருட்களோ..!!

  பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

  இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டிய நிலையில் அதனை தொடர்ந்து வட்டி செலுத்தாமல் இருந்தததால், ரூபாய் 1கோடியே 21 லட்சம் ரூபாய் கடனை செலுத்துமாறு பல முறை பைனான்ஸ் நிறுவனம் மூலமாக மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியும் கண்டுக்கொள்ளாததால், பைனான்ஸ் நிறுவனம் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்து பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது.அதனடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுவந்தியின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்து சென்றனர்.
  இந்த நிலையில் வீட்டிலிருந்த 30லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீல் வைக்கப்பட்ட வீட்டிலிருந்த பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியதாகவும், ஆனால் பொருட்களை எடுப்பதற்குள் வீட்டினை மற்றொருவருக்கு ஏலத்தில் விற்று விட்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

  மேலும் வீட்டிலிருந்த தனக்கு சொந்தமான பொருட்களை பைனான்ஸ் நிறுவனம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

  இந்த கடன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமாசங்கர், கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் அனுமதியின்றி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதனால் உடனடியாக தனக்கு சொந்தமான 30லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தர வேண்டும் என மதுவந்தியின் வழக்கறிஞர் புகாரில் தெரிவித்துள்ளார்.
  இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • இரவின் நிழல் மீது உள்ள என் ஆசை.. நடிகர் பார்த்திபன் விளக்கம்..!!

  சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது இதில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் பட்டத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம்.

  இப்படத்திற்கு 21 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் திரும்பி வந்ததா என்பது பற்றி கவலையில்லை. உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்துள்ளது. ரூ.75 லட்சத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு விழாவை நடத்த முடியாது. தமிழக அரசு நிதியை 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன்.

  தமிழ் சினிமாவின் பலமே படத்தின் கருதான். தமிழர்களின் அறிவுத்திறன், தரம் உயர்ந்தது. நிறைய திறமையாளர்கள் இருந்தாலும் அதிலும் திறமையானவர்கள் யார் என்பதை தேர்வு செய்வது கடினம். வர்த்தக படங்கள் விருது படங்கள் என்று இருவகை உண்டு. கமர்ஷியல் படங்களுக்கு அதன் வருமானமே விருதுதான்.

  உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது. அவரிடம் அவரது தாத்தாவிடம் உள்ள திறமை ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண் சக்தி எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.

  மூன்று முறை தேசிய விருது வாங்கியிருந்தாலும் இதுவரை அவரது ஆசை அடங்கவில்லை என இரவின் நிழல் படத்திற்கான தனது எதிர்பார்ப்பை நடிகர் பார்த்திபன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 • 52 அறுவை சிகிச்சை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கங்கனா!

  2008ம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கங்கனா ரனாவத்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு இசைமைத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

  ‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி கங்கனா ரனாவத்  அதற்கு பிறகு பாலிவுட்டில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நடிகை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது சகோதரிக்கு நடந்த ஆசிட் வீச்சு குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று 17 வயது சிறுமி ஆசிட் வீசப்பட்டதன் எதிரொலியாக பாலிவுட் நடிகை  கங்கனா ரனாவத்  தனது சகோதரிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்த உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

  எனது சகோதரி ரங்கோலி சாண்டல் 21 வயது இருக்கும் போது எவனோ ஒரு ரோடு சைடு ரோமியோ ஆசிட் வீசி சென்றுவிட்டான். அவன் செய்த அந்த பயங்கரமான காரியத்தால் கிட்டத்தட்ட என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

  எங்கள் குடும்பத்தால் அந்த துயரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் எங்களின் ஒட்டுமொத்த குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளானது. அதன் காரணமாக ஒவ்வொரு முறை என்னை யாராவது கடந்து செல்லும் போதெல்லாம் என் மீதும் ஆசிட் வீசி விடக்கூடும் என்ற பயத்தால் நானும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

  ஒரு பைக் அல்லது ஒரு கார் என்னை தாண்டி செல்லும் போது எனது முகத்தை நான் மூடி கொள்ளும் அளவிற்கு என் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற அட்டூழியங்கள், வன்முறைகள் நின்ற பாடாக இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என ஒரு குறிப்பை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.  

 • அவதார் – 2, உலகமெங்கும் நாளை 16.12.2022..!!

  ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். ஏலியன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 

  சராசரி உலகத்துக்குள் புதிய உலகம் ஒன்றை கொண்டுவந்ததால் அவதார் படமானது சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. 

  இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

  இதனையடுத்து நாளை 16.12.2022 அன்று அவதார் வெளியாகவும் அதனை காண உலகமெங்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். பாகம் 1’ஐ விட பாகம் 2 மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது.

 • உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாயகனும்,
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சராக பதவி ஏற்க உள்ளது தமிழ் திரை உலகத்திற்கே பெருமை என்று சொல்லலாம். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திரை உலகினரிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

  முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞர் அவர்கள் இளம் வயதிலேயே திரைத்துறையில் தனது வசனத்தால் புரட்சியை ஏற்படுத்தியவர். படங்களயும் தயாரித்தவர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, மந்திரியாகி, ஐந்துமுறை முதல்வராக
  ஆட்சிக் கட்டிலில் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் இன்றுவரை நீக்கமற நிறைந்து வாழ்ந்துவருகிறார்.

  அதேபோல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திரைத் துறையில் ஆளுமையுடன் கூடிய மய்யமாக வலம் வந்து, கதாநாயகனாக நடித்து வெற்றிபெற்று , சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று சட்ட சபையில் நுழைந்து அசத்தி வருகிறார்.

  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அய்யா கலைஞர் ஆசியுடனும் , தந்தை தளபதி வழிகாட்டுதலிலும் , மந்திரி பதவியில் சிறப்பாக பணியாற்றி மக்கள் நம்பிக்கையை பெறுவார் என்பது நிச்சயம். திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 • ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ்..!

  ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார்.

  ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

  ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது.

  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசையமைத்தவர் ஜீ.வி. பிரகாஷ் குமார். இந்த இரண்டு திறமைசாலிகளும் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருப்பதால் இப்படத்தின் அறிவிப்பின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

  நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து மலையாளத்தில் வெளியாகி, வெற்றிப் பெற்ற ‘தி டீச்சர்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கும் நட்மெக் புரொடக்ஷன்ஸ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணிக்’ எனும் படத்தையும் தயாரித்திருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்நிறுவனம், நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 • பூஜையுடன் துவங்கியது “பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு..!!

  பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்”.

  சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்

  கலை – மாதவன்
  படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
  சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
  நடனம் – அசார்
  பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
  பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
  புரொடக்‌ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
  மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

  2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 • மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் விட்ட வேண்டுகோள்..!!

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள்.

  தமிழ் திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

  ஆண்டுதோறும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் அன்று தனது வீடு முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை சந்திப்பார். வாழ்த்து கூற காத்திருக்கும் தனது அன்பான ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வார். இந்த வருடம் வழக்கம் போல போயஸ்கார்டன் வீடு முன்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்தை சந்திக்க முடியவில்லை. காரணம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்றுள்ளாராம்.

  மழையில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ரஜினி பிறந்தநாளில் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் வீட்டில் இல்லாதது தெரியாமல் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். இந்த ஆண்டு தலைவரை சந்திக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் பலரும் திரும்பி சென்றனர். இதனிடையே ரசிகர்களுக்கு முக்கிய விருந்தாக ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • சாதனை படைத்த ’சில்லா சில்லா’..!!

  துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா பாடல் நேற்று வெளியானது.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடலில் ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க சியர்ஸ்,போனது போகட்டும் தேவையில்ல டியர்ஸ்..புடிச்சது செய்றது என்னைக்குமே மாஸ்..தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர் பீஸ்’

  இப்படி பல மோட்டிவேன் வரிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடல் வரிகள் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது.

  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.அஜித் என்றாலே நிச்சயம் பைக் காட்சிகள் கட்டாயம் படத்தில் இருக்கும். இந்த படத்திலும் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

  படத்தில் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கிறது என ஹெச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். படத்தின் போஸ்டர் மற்றும் புதிய ஸ்டில்ஸ்களை படக்குழு வெளியிட்டது.அந்த புகைப்படங்களில் அஜித் பார்க்க செம்ம ஸ்டைலாக இருந்தார். புகைப்படத்தை பார்த்த பிறகு அஜித் இதில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்ற தகவலும் பரவி வந்தது.

  இந்த பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 24 நேரத்திற்குள்ளேயே யூடியூபில் 10 மில்லியன் வியூஸ் பெற்று ’சில்லா சில்லா’ பாடல் சாதனை படைத்துள்ளது.

 • சொத்துக்காக மூத்த நடிகையை கொலை செய்த மகன்..!!

  74 வயதான இந்தி நடிகை வீணா கபூர், ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா,’ ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சொத்து தகராறால் அவரது மகன் சச்சின் வீணாவை கொன்றதாகக் கூறப்படுகிறது.

  இதையடுத்து நடிகை நிலு கோஹ்லி, மறைந்த நடிகை வீணா கபூரை நினைவுகூர்ந்து இன்ஸ்டகிராமில் ஒரு நீண்ட பதிவை எழுதினார். 74 வயதாகும் வீணாவை, அவரது மகன் சச்சின் கபூர் மற்றும் அவர்களது உதவியாளர் சோட்டு என்ற லாலுகுமார் மண்டலால் இணைந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

  டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு நிலு அளித்த பேட்டியில், வீணாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். “இந்தச் செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது, வயிறு எரிகிறது, என்னால் சாப்பிட முடியவில்லை. என்னால் சிந்திக்க முடியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை” என்றவர், இந்த வழக்கை கிரைம் ரோந்து என்ற க்ரைம் ஷோவுடன் ஒப்பிட்டு, இங்கு உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்று மறைமுகமாகக் கூறினார்.

  இந்தி மீடியம், மன்மர்சியான், ஜோகி, குட்பை போன்ற பல படங்களில் பணியாற்றிய நிலு, வீணாவுக்கு இந்த மறைவுக்கு தகுதியானவர் இல்லை என்று குறிப்பிட்டார். கொலைக்கு காரணமான சொத்து தகராறு, அவர் வாழ்க்கையில் முக்கிய புள்ளியாக மாறியதாகவும் கூறினார்.

  காணாமல் போன பழம்பெரும் நடிகை தனது சொந்த மகனால் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையினர் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

 • உயிரிழந்த கணவனை பார்த்த அதிர்ச்சியில் உயிர் விட்ட மனைவி..!!

  புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

  இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். இதை பார்த்த வினிதா அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டிலேயே சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


  இதனை கண்ட அவரது குடும்பத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநாவுக்கரசின் உடலை நேற்று ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றனர. அங்கு கணவரின் உடலை பார்த்த வினிதா, துக்கத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து வினிதாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தையை இழந்து அந்த 2 குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறது.

 • 72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார்..!

  பஞ்ச் டயலாக், ஸ்டைல், அசத்தலான நடிப்பு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கென்று ஓர் ரசிகர் கூட்டத்தை இன்று வரை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ஒரே மனிதர் இவர்.

  தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 72. ’16 வயதினிலே’ படத்திலேயே ‘இது எப்படி இருக்கு’ என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம் சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற “சும்மா அதிருதுல்ல’ வரை தொடர்ந்து தற்போது 2.0 சிட்டி ரோபோவே பஞ்ச் அடிக்கும் வரை பட்டையை கிளப்பினார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

  2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் இரசினிகாந்து புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் இரசினிகாந்து ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரசினிகாந்து ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.

  இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் இரசினிகாந்து. ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து இரசினிகாந்து அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.

  அனால் இப்போது 10.12.2022 அன்று மறுபடியும் பாபா படத்தை சூப்பர் ஸ்டார் அவர்கள் ரீரிலீஸ் செய்தார். அன்று படு தோல்வி அடைந்த பாபா திரைப்படம் இன்று ரசிகர்களால் கொண்டாட படுகிறது. சிறிது எடிட்டிங் மற்றும் மாற்றங்கள் செய்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார் ரஜினிகாந்த்.

 • பாபா படம்.. அன்று தோல்வி இன்று வெற்றி..!!

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

   நாளை மறுநாள் (டிச.12) ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று பாபா படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது. 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ’பாபா’.

  ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்த பாபா படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. பிருந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக இப்படத்தில் பணிபுரிந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

  இந்நிலையில் பாபாவை ரீ ரிலீஸ் செய்வதாக முன்னதாக ரஜினிகாந்த் அறிவித்ததை அடுத்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. நாளை மறுநாள் (டிச.12) ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று பாபா படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது.

  ராசிகார்கிலைடையே பெரும் ஆதரவையும் வரவேற்ப்பையும் இந்த பாபா படம் பெற்றுள்ளது. ஒரு சில காட்சிகளை எடிட் செய்தும் ஒரு சில காட்சிகளை அழகாக மாற்றி அதற்கேற்றாற் போல் மக்களை கவர்ந்து உள்ளனர். அதுவே படத்தை வெற்றி பெற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • “லவ்” டீஸர் வெளியீட்டு விழா !!!

  நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

  இவ்விழாவினில்
  எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது..
  பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி என்றார்.

  நடிகை வாணி போஜன் பேசியதாவது…
  முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா ? என யோசித்தேன் ஆனால் இந்தக்கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

  நடிகர் பரத் பேசியதாவது…

  இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப்படக்குழு என் குடும்ப நண்பர்கள் மாதிரி பழகினார்கள். RP Films R.P.பாலா தயாரிப்பாளராக மாறிவிட்டார். மிக நல்ல இயக்குநர். அவருடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. R.P.பாலா சாருக்கு நன்றி. P G முத்தையா சார் ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்துள்ளார் அவருக்கு நன்றி. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன், அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு எனக்கு இணையான பாத்திரம் மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

  இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா பேசியதாவது..,
  பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னை விட அவர் தான் இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார். விவேக்கை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். விவேக் சூப்பராக நடித்துள்ளார். டேனியல் என் நண்பர். பரத், வாணி போஜன் இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான் ஹீரோ. டிரெய்லர் விழாவில் மீதம் சொல்கிறேன் எல்லோருக்கும் நன்றி.

  ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது…
  மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி.

  நடிகர் டேனியல் பேசியதாவது…
  காலேஜ் படிக்கும் போது எங்க ஏரியாவில் நடிகர் பரத் ஜிம்முக்கு போகும் போது பார்த்திருக்கிறேன். இப்போது அவரோடு நடித்தது மகிழ்ச்சி. நடிகை வாணியுடன் இன்னொரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். மிக நல்ல நடிகை. இந்தப்படம் மிக திரில்லிங்கான கதை, நிறைய டிவிஸ்ட் இருக்கிறது. இயக்குநர் R.P.பாலா சூப்பரான ஆக்டர் அவரை நடிகராக பார்க்க ஆசை. இந்தப்படம் என்னோட கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி.

  நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..
  என்னுடைய இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பரத் வாணி போஜன் வெற்றிக்கூட்டணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் கதையில் நிறைய ஆச்சர்ய திருப்பங்கள் இருக்கிறது. உங்களை மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.

  நடிகர்கள் : பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப்,

  தயாரிப்பு நிறுவனம் : RP Films
  தயாரிப்பு: R.P.பாலா – கௌசல்யா பாலா
  இயக்கம்: R.P.பாலா
  ஒளிப்பதிவாளர்: P.G.முத்தையா
  இசை: ரோனி ரபேல்
  எடிட்டர்: அஜய் மனோஜ்
  கலை இயக்குனர்: தினேஷ் மோகன் (MFA)
  நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆண்டோ.எல்
  ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம்
  நடனம்: சந்தோஷ்
  மக்கள் தொடர்பு – சதீஷ் ( Aim )

 • “கிடா (Goat)” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

  “கிடா (Goat)” திரைப்படம் மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
  ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


  இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவது மட்டுமல்லாமல் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.


  கிடா (Goat) படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  தொழில் நுட்ப குழு விபரம்
  ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
  கலை இயக்கம் : K.B.நந்து
  பாடல்கள் : ஏகாதசி
  எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
  இசை : தீசன்
  ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
  தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
  இயக்கம் : ரா. வெங்கட்

  20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது. இவ்விழாவினில் கிடா திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

 • ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஒரே நாளில் ரிலீஸ்..!!

  இளைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும்,  தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.

  இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • திரு வெங்கையா நாயுடு துவக்கி வைத்த நூற்றாண்டு விழா..!!

  கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவில் ஏழு சாதனையாளர்களுக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.

  மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா சென்னையில் ஞாயிறு மாலை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பாக செய்திருந்தார்.

  சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்.

  கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் இந்த நூற்றாண்டின் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை என்று நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார்.

  “கண்டசாலா அவரது இசையால் இன்னும் வாழ்கிறார். இந்திய இளைஞர்கள் அவரது வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்த விழாவில் அவரது பாடல்களைக் கேட்டதும் என் குழந்தைப் பருவ ஞாபகங்கள் வந்து விட்டன. எந்த சந்தேகமும் வேண்டாம் இந்த நூற்றாண்டின் இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். பல தலைமுறையினர் அவரின் குரலுக்கு ஈர்க்கப்பட்டவர்கள்.
  தினசரி காலை 4.30 மணிக்கு எழுந்த பிறகு கண்டசாலா மற்றும் எஸ்பிபி யின் பாடல்களை கேட்டு தான் நாளை தொடங்குகிறேன்,” என்று அவர் கூறினார்.

  தொடர்ந்து பேசிய திரு நாயுடு, ” மிகவும் அற்புதமான நிகழ்ச்சியை ரசித்தேன். என் வாழ்நாளில் இன்றைய நிகழ்ச்சியை நான் மறக்கமாட்டேன். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக பார்வதி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தகுதி உடைய சாதனையாளர்களை இந்த விழாவில் கௌரவப்படுத்தியதற்காக பார்வதி அவர்களை பாராட்டுகிறேன். சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது இளம் தலைமுறையினர் சாதிக்க ஊக்குவிக்கவே,” என்றார்.

  தாய் மொழியை கற்பது மற்றும் தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், முதலில் தாய்மொழி, பிறகு சகோதர மொழி அதன் பின்னர் மற்ற மொழிகள் என்று கூறினார்.

  “இந்தியாவில் மிகவும் பழமையான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகள் இருக்க அந்நிய நாட்டு மொழி எதற்கு. முதலாவது தாய்மொழி பின்னர் சகோதரத்துவ மொழி. இரண்டிற்கு பிறகு தான் தேவைப்பட்டால் அந்நிய மொழி. முதலில் தாய் மொழியில் பேசுங்கள், பின்னர் பிறருக்கு புரியவில்லை என்றால் அதற்கு உரிய மொழியில் பேசுங்கள்,” என்று அவர் கூறினார்.

  தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் பேசுகையில், “கலை மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில் சென்னை பெயர் பெற்றது. சென்னையில் நடத்தப்படும் கண்டசாலாவின் நூற்றாண்டு விழா நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் மூலம் கண்டசாலா தனது தடத்தை பதித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு கண்டசாலா இசையமைத்துள்ளார், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்,” என்று கூறினார்.

  நிகழ்ச்சியில் புத்தக வெளியீடு நடைபெற்றது. மேலும் பத்ம ஸ்ரீ கலைமாமணி சுதாராணி ரகுபதி, கலைமாமணி எல் ஆர் ஈஸ்வரி, கலைமாமணி நந்தினி ரமணி, பத்ம ஸ்ரீ கலைமாமணி அவசரலா கன்னியாகுமாரி , பத்ம ஸ்ரீ மற்றும் தேசிய விருது வென்ற தோட்டா தரணி, பத்ம ஸ்ரீ கலைமாமணி சிவமணி, கலைமாமணி தாயன்பன் ஆகியோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.

  சங்கீத நாடக அகாடெமி, புது தில்லி தலைவர் சந்தியா புரெச்சா, கண்டசாலா வெங்கடேஸ்வரா ராவின் பேரன் மொஹிந்தர் கண்டசாலா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.

  தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்பு யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

  அவரது நினைவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள
  பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்தினார்கள்.

  இதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வகையான பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றது .

  இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்கேற்றார்கள்.

  இதை தவிர உலகமெங்கும் உள்ள கலைஞர்களின் பிரதிநிதித்துவமும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

  100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடினார்கள். இதற்காக பல்வேறு இசை பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களில் இருந்து சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியை சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்தக்குழுவினர் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், கதகளி, ஒடிஸ்ஸி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

  உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதில் மூலம், பார்வதி ரவி கண்டசாலாவின் கலா பிரதர்ஷினி, 1998 முதல் இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 10,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற துணைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.

  பார்வதி ரவி கலைமாமணி, நாட்டிய இளவரசி, பத்ம சாதனா, நாட்டிய மயூரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பயிற்சியாளர், நடன இயக்குநர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர் ஆவார்.

  நான்கு சதாப்தங்களுக்கும் மேலாக கலை உலகில் வெற்றிகரமாக வலம் வரும் பார்வதி ரவி இளைஞர்களிடையே பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சியில் அவரது அமைப்பான கலா பிரதர்ஷினி மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.

 • உயிர் தமிழுக்கு படத்தை வெளியிடுகிறார் சுரேஷ் காமாட்சி..!!

  இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.

  மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

  அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

  ‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு மொலோடி கிங் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

  பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

  இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

 • ‘காஃபி வித் காதல்’ படத்தை உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிக்கிறது ZEE5

  சுந்தர் சி எழுதி இயக்கிய, தமிழ் படம் ‘காஃபி வித் காதல்’ இப்படத்தை டிசம்பர் 9, 2022 அன்று ZEES இல் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக உள்ளது.

  இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சியை இன்று அறிவித்தது. ஜீ ஸ்டுடியோஸ், குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தானி திவ்யா ஷண்ஹிம் ஆகியோர் நடித்துள்ளனர்.

  ஸ்ரீகாந்த் [இசை ஆசிரியர்], ஜீவா [ஐடி தொழில் வல்லுநர்] மற்றும் ஜெய் [விருப்பமுள்ள தொழிலதிபர்] ஆகிய 3 சகோதரர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள கதை, அவர்களின் ஆளுமையின் வெவ்வேறு பக்கங்களை ஆராய்கிறது.

  யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடனும், இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவுடனும், உடன்பிறந்த உறவின் அரவணைப்பு மற்றும் வெறித்தனத்தை படம் சித்தரிக்கிறது. இப்போது, ​​ ZEE5 இல் அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், படம் 190+ நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். எனவே, இந்த இதயத்தைத் தூண்டும் கதையாகும்.

  ZEE5 தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்:

  “எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல கதைகளையும் உண்மையான கருத்துகளையும் முன்வைப்பதில் ZEES இல் நாங்கள் எப்போதும் ஆக்கபூர்வமாய் இருப்போம். இக்கதை உடன்பிறந்தவர்களின் அன்பையும் அரவணைப்பையும் நன்றாகவே வெளிப்படுத்தி நம் மனதை ஈர்த்திருக்கிறது. இன்றைய வேகமான உலகில் இதுபோன்று அன்பினை நாம் அரிதாக காண்கிறோம் மேலும் காபி வித் காதல் உடன்பிறந்தவர்களை ஒன்றிணைக்க சரியான வாய்ப்பை அளிக்கிறது.” அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

  சுந்தர் சி கூறுகையில், “காபி வித் காதலில் ஒரு முழுமையான பொழுதுபோக்குக்கான அனைத்து அத்தியாவசிய கூறுகளும் உள்ளன. நம் பெற்றோர்கள் நமது தனித்துவமான திறன்களை உணரத் தவறிய நேரங்களும் உண்டு, ஆனால் நம் உடன்பிறப்புகள் எப்போதும் நம்மைக் கவனித்து, நம்மைச் சரியாகச் செய்யத் தயாராக இருப்பார்கள். காபி வித் காதல் என்பது உறவுகளின் கலவையாகும், இது ஒருவரை அவர்களின் உடன்பிறப்புகளுடனான அவர்களின் சமன்பாட்டை நிச்சயமாக நினைவுபடுத்தும்.

  ‘காஃபி வித் காதல்’ உங்கள் உற்சாகத்தை உயர்த்தவும், உங்கள் இதயத்தை இழுக்கவும் தயாராக உள்ளது!

  டிசம்பர் 9 முதல் ZEE5 இல் மட்டும் ‘காபி வித் காதல்’ பார்க்க தயாராகுங்கள்! என்றார்.

 • பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர் சாதனை..!!

  படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌

  படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனு-மேனின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்யேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

  இதனிடையே ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா ‘ஹனுமான் முன் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  டீசரில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறது. படக்குழுவினர் அண்மையில் அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமனின் ஆசிர்வாதத்தை பெற்று, அடுத்த கட்ட விளம்பரப் பணியில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள்.

  ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரவ் ஹரி -அனுதீப் தேவ்- கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா வடிவமைத்திருக்கிறார். பிரைம் ஷோ எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியிட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவிக்கும் வதந்தி..!!

  டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ் ஜே சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர். வதந்திகள், பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் வலையில் சிக்கி இருந்தாலும், உண்மையை வெளிக் கொண்டு வரும் வரை மனம் திரும்ப மறுக்கும் ஒரு சிக்கலான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.


  எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

  அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில விமர்சங்கள்

  சில்வர் ஆரிப் எனும் ரசிகரின் பதிவு… ” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான வதந்தி எங்களை ஏமாற்றவில்லை. தரமான படைப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் மிகப் பெரும் படைப்பாக உருவாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, எங்களை சிறந்த நடிப்பின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் பள்ளி பாடப் புத்தகத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு குறித்த ஒரு அத்தியாயம் இடம்பெறும் என நம்புகிறேன்.”

  ரிச்சர்ட் மகேஷ் என்பவரின் பதிவில், ” எஸ். ஜே. சூர்யாவின் கம்பீரமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படைப்பு. எந்த இடங்களிலும் குறை கூற முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு திகில் கதையை நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். வெலோனியாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா, முழு தொடரின் ஆன்மாவாக பரவி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இதனை உருவாக்கிய புஷ்கர் -காயத்ரிக்கும் பாராட்டுகள்..!” என பதிவிட்டிருக்கிறார்.

  நித்யா எனும் ரசிகையின் பதிவில்,” வதந்தி இதயத்தை கனமாக்கிய தொடர்..! எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு உங்களை உணர்வுபூர்வமாக தொடருடன் இணைக்கும். என்னை பொருத்தவரை எத்தனை காட்சிகளில் கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் எஸ். ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பை காணலாம். இயக்குநரால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொடர். அவருக்கும் நன்றி” என பகிர்ந்திருக்கிறார்.

  யூமரி பாலன் எனும் ரசிகரின் பதிவில், ” என்ன ஒரு தொடர்..! இந்த தொடரில் பங்களிப்பு செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக தலைவர் எஸ் ஜே சூர்யா சார், மது அருந்தும் காட்சியும், வசனமும் எனக்கு இறைவி திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நினைவு படுத்தியது. அருமை.. தொடர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டிருக்கிறார்.

  வி வேலன் என்பவரின் பதிவில், ” வதந்தி- எஸ் ஜே சூர்யா நடிப்பில் வேட்டையாடியிருக்கும் தொடர். ஒளிப்பதிவாளர், பின்னணி இசை, கதை, நடிப்பு அனைத்தும் பிரமாதம். இதன் மூலம் எஸ் ஜே சூர்யாவால் நடிக்க முடியாத வேடம் ஏதும் உண்டா? என்ற அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். அத்துடன் இதைக் கடந்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் ? எஸ் ஜே சூர்யா ஒரு நேச்சுரல் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.” என பகிர்ந்திருக்கிறார்.

  ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரில், எஸ். ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ் ஜே சூர்யா மூழ்கி விட்டார். இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.

 • கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ரகு தாத்தா..!!

  கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, ‘ரகு தாத்தா’- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். ‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. இத்திரைப்படத்தில் ‘நடிகையர் திலகமாக’ வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த ‘பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் புகழின் உச்சத்தில் திகழும் நாயகியான கீர்த்தி சுரேஷுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.

  ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில் கே.ஜி.எஃப்-2, காந்தாரா வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தனது அடுத்த படைப்பான ரகு தாத்தாவை அறிவித்துள்ளனர். இப்படமானது, நாயகியை மையமாக கொண்ட கதை களம் மட்டுமின்றி பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் நகைச்சுவை அம்சமும் கொண்டது. இத்திரைப்படத்தில் அமைதியுடன் கூர் மதி கொண்டு, கொள்கையில் உறுதியுடன், தேவையெனில் புயலாக மாறும் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை வெளியீட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது – ‘ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும். நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும் படி இருக்கும். இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால் தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி’.

  ஹோம்பாலே பிலிம்ஸ் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், இந்திய திரை ரசிகர்களுக்கு புது புது அனுபவங்களை கொடுக்கவும் ஒருபோதும் தயங்கியதில்லை. காந்தாராவின் வெற்றியானது நிரூபித்தது கே.ஜி.எஃப்-2 வைப்போல் நல்ல கதையம்சம் கொண்டு நேர்த்தியாக எடுக்கப் படும் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவிக்கும். ஹோம்பாலே பிலிம்ஸ் வருமாண்டில் மேலும் 4 பிரமாண்ட படைப்புகளை வெளியிட தயாராக உள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’, செப்டம்பர் 2023, பாஹத் பாஸிலுடன் ‘தூமம்’, ஸ்ரீமுரளியுடன் ‘பகிரா’ 2023 இறுதிக்குள். இதை தவிர்த்து, மேலும் ஒரு பான் இந்திய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் வரவிருக்கும் இரு ஆண்டுகளில் 14 திரைப்படங்களை வெளியிட உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைக்க முடியாத திட்டமிது.

  ஹோம்பாலே பிலிம்ஸின் வெற்றி ரகசியமான திறமை மிக்க குழுவும், தகுதியான நடிகர்களும் ரகு தாத்தாவிற்கும் கிடைத்துள்ளனர். திரு. M. S. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T. S. சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகிறது ரகு தாத்தா.

 • ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!

  தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

  பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

  தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

  “தி பீப்பிள் மீடியா பேக்டரி” சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத்.தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா.இணைந்து தயாரித்துள்ளார்.

  ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

  இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

  இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
  மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

 • ராம் சரண் RC 15 படத்தை  நியூசிலாந்தில் முடித்தார்..!!

  மெகா பவர் ஸ்டார் ராம் சரண் பற்றிய எந்த ஒரு சிறு செய்தியும் நொடியில் வைரலாகிவிடும். இப்போது அவர் தனது வரவிருக்கும் RC 15 பற்றிய ஒரு அற்புதமான புதுப்பிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராம் சரண் மற்றும் வெள்ளித்திரை செல்லுலாய்ட் ஷங்கர் ஆகியோரின் கலவையில், பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்த புகழ்பெற்ற பான் இந்தியா படம்.

  சமீபத்தில், RC 15  குழு நியூசிலாந்து சென்றது. இயக்குனர் ஷங்கர் முக்கியமான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை அழகான இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் படத்தின் ஷூட்டிங்கை நியூசிலாந்தில் முடித்தவுடன், RRR சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் சென்று படப்பிடிப்பிலிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார்,

  அவர் செட்டில் இருந்து தன்னையும் குழுவையும் கொண்ட சில அல்ட்ரா-ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் மிகவும் தனித்துவமானதாகவும் காட்சி விருந்தாகவும் தோன்றுகிறது. இந்தப் பாடலுக்காக தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது இந்த சார்ட்பஸ்டர் எண்ணில் உள்ள காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட பிரேம்களை கற்பனை செய்து பாருங்கள். 2023ல், மாஸ்டர் ஃபிலிம்மேக்கர் ஃப்ரேம்களும், பரபரப்பான இசையமைப்பாளர் தமன் எஸ் டியூன்களும் திரையரங்குகளை அதிரவைக்கும்.

  இந்த பரபரப்பான செய்தியால் தற்போது ராம் சரண் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். டாக்டர் 15 அலென் எதரே லவரம் ஸ்ரீகாந்த் அனியாலி படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

  RC15 படத்தில் ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி மற்றும் சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 • ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது!

  ‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரஷ்யாவில் தற்போது பிரம்மாண்டமான வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரைய்லர் தற்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகி உள்ளது.

  https://www.instagram.com/reel/CliJGAyj8aS/?igshid=YmMyMTA2M2Y=

  நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல் நாளில் இருந்து  பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனைப் படைத்து வருகிறது. எல்லைத் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம் தற்போது ரஷ்ய சினிமா சந்தையில் வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாக இருக்கிறது.

  ரஷ்யாவின் மாஸ்கோவில் டிசம்பர் 1ம் தேதி மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் டிசம்பர் 3ம் தேதியும் நடிகர்கள் மற்றும் படக்குழு முன்னிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், ரஷ்யாவின் 24  நகரங்களில்  நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் ’புஷ்பா’ திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.

  ரஷ்யாவில் ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்புக் காரணமாகவே தேசம் தாண்டியும் தற்போது சென்றடைந்துள்ளது. ‘புஷ்பா’ படம் தொடர்பாக படக்குழு வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியிடுமா என ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 • உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

  நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார்ரின் ‘நந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியியிட்டார்.

  ‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

  யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

 • சத்யராஜை பெருமைப் படுத்திய படம்!! “ஒன்பது ரூபாய் நோட்டு” !

  இதைப்பற்றி தங்கர் பச்சான் குறியதாவது :

  எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.

  சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்தப் பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

  பரத்வாஜ் இசை, வைரமுத்து பாடல்கள், லெனின் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் அனைத்துமே ஈடு இணையற்றவைகள்.

  தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். நான் மட்டும் நினைத்தால் அவைகள் இடேறாது.

  எழுத்தில் உயிர் வாழ்ந்த ஒன்பது ரூபாய் நோட்டு உயிர் ஓவியமாக, திரைப்படமாக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மருத்துவர் கணேசன் அவர்களை என்றென்றும் மறவேன்.

 • அயோத்தி சென்ற ‘ஹனு-மேன்’ படக்குழு..!!

  ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர்.

  படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு ‘ஹனு-மேன்’. இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி, வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.

  ‘ஹனு-மேன்’ படத்தின் டீசருக்கு கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த பட குழுவினர், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மீக பயணம், அடுத்தக்கட்ட விளம்பரத்தை தொடங்குவதற்கானது என தயாரிப்பு தரப்பு தெரிவித்திருக்கிறது.

  வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரமான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, கெட்டப் சீனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தினை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 • குதிரை பந்தயத்துக்கு இல்லாத தடை ஜல்லிக்கட்டுக்கு ஏன் ??

  தமிழனின் கலாச்சாரம் என்றாலே முதலில் தோன்றுவது  ஜல்லிக்கட்டு தான். காலம்காலமாக பின்பற்றிவரும் ஜல்லிக்கட்டை இப்போது திடீரென தடை செய்ய, இதை பற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் மறுபடியும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நவ 23 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

  ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் பிரச்சனையா என்று மக்களிடையே பரபரப்பு நிலவி வரும் நிலையில் சசிகுமார் நடிக்கும் காரி படம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். சர்தார் என்கிற வெற்றி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், இன்று ஜல்லிக்கட்டு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் துவங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் ஜல்லிக்கட்டு எந்த விதமாக இடம்பெற்றுள்ளது மற்றும் அது எப்படி நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சசிகுமார், இயக்குநர் ஹேமந்த், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், நாயகி பார்வதி அருண் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

  நாயகன் சசிகுமார் பேசுகையில்:

  “ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இதுபற்றி நாம் விரிவாக பேசமுடியாது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நம் தமிழக அரசு சரியான முறையில் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எப்படியும் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம்.

  மாடுகளில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது காரி காளை மாடு தான். அதேசமயம் படப்பிடிப்பின்போது எந்த ஜல்லிக்கட்டு காளையுடனும் நாம் நெருங்கி பழக முடியாது. காரணம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடு நமக்கு எதிராக இருக்கும். அது எந்தப்பக்கம் போகும், நம் மீது பாயுமா என்பதெல்லாம் அந்த நொடியில் கூட கணிக்க முடியாது. சில மாடுகள் நம்மைத் தாண்டி சென்றுவிட்டு மீண்டும் தாக்குவது போல் திரும்பி வந்ததும் உண்டு..  அதேசமயம் முறைப்படி அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியதால் இந்த படத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.” என்று கூறினார்

  தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில்: “சில அமைப்புகள், திரையுலகை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, ஒட்டுமொத்த திரையுலகின் கருத்து அல்ல.. ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. ஜல்லிக்கட்டை யார் எதிர்த்தாலும் அவற்றை உயிராக நினைக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இந்த படத்தை நாங்கள் எடுத்து இருப்பதே அந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் அதை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதை இந்த படம் மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

  ஜல்லிக்கட்டு மட்டும்தான் மிருகவதையா, குதிரை பந்தயத்தில் அது இல்லையா, அதற்கு மட்டும் தடை விதிக்காமல் ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்றால், குதிரைப்பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு.. ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. அவ்வளவுதான் இதில் உள்ள அரசியல்” என்றார்.

  இயக்குநர் ஹேமந்த் பேசுகையில்:

  “படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம். இந்தபடத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். நிச்சயமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக இருக்கும்.

  இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வசனங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, யாருக்கும் எதிரான வசனங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை ஆர்ப்பாட்டமாக சொல்லாமல் கதைக்கு எது தேவையோ அதைமட்டும் கூறியிருக்கிறோம். கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை என்னுடைய பார்வையில் நான் கூறியுள்ளேன்

  இதில் சசிகுமார் குதிரைப்பந்தய ஜாக்கியாகவும் ஆடுகளம் நரேன் குதிரைப்பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.” என்றார்.

 • செய்தியாளர்களை கடத்திய விஜய் மக்கள்  இயக்கம் !!!

  செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜய் மக்கள் இயக்கதை சேர்ந்தசிலர் கடத்தி சென்று தாக்கியதாகவும், செய்தி சேகரித்து கொண்டிருந்த போதே ஈசி ஆர் சரவணன் தலைமையிலான குழு அவர்களின் கேமரா செல் போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்து காரில் ஏற்றி சென்றுருக்கின்றனர் என்று செய்திகள் பரவுகின்றன.

  வாரிசு படம், அரசியல் என்ட்ரி, காலில் விழும் கலாச்சாரம் என தொடர்ந்து நடிகர் விஜய்யை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த கடத்தல் நிகழ்வு அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

  நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குறைவான தியேட்டர்களை ஒதுக்குவது போன்ற தீர்மானத்தை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமானிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அப்படி நடந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் தனது கருத்தை கூறினார்.

  செய்திகள் இப்படி பரவிவரும் நிலையில் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கடத்தவில்லை என்றும் மேலும் வாரிசு காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லீக் ஆகி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்கள் சிலர் ட்ரோன் மூலம் வாரிசு படப்பிடிப்பில் நடக்கும் விஷயங்களை படமாக்க நினைத்தனர் என்றும் அதனால் தான் அவர்களை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அழைத்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென செய்தியாளர்கள் அப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

  வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும் இடத்தில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர் என்றும் அதன் காரணமாகவே அவர்களை அழைத்து இப்படி பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகி ஈசிஆர் சரவணன் அறிவுறுத்தினார் என்றும் விஜய் ரசிகர்கள் அந்த கடத்தல் சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 • வீரப்பன் கதைக்கு  பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

  ‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான தகவல்களை சொல்லமுடியவில்லை என்று கருதியதால் வீரப்பன் கதையை வெப் தொடராக இயக்க முடிவு செய்தார்.

  படப்பிடிப்புக்கான பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில் வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்துவந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு கடந்த 15-11-2022 அன்று வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் சாரம்சமாக “வீரப்பன் கதையை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் தரப்பில் முத்துலட்சுமிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரப்பன் கதையை படமாக்குவதால் வீரப்பன், வீரப்பன் மனைவி, வீரப்பன் மகள் ஆகியோருக்கு எந்த கெட்டப்பெயரும் ஏற்படபோவதில்லை. எனவே வீரப்பன் கதையை படமாக்குவதில் எந்த தடையும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

  இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியதாவது:-

  ‘வனயுத்தம்’ படத்தில் வீரப்பன் கதையை முழுமையாக சொல்லமுடியவில்லை என்ற காரணத்தால் வெப் தொடராக இயக்க முடிவெடுத்தேன். தமிழ்நாட்டில் இதை எதிர்த்து முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இனி தமிழ்நாட்டில் வழக்கு தொடரமுடியாது என்பதால் கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்தார். இப்போது அதிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

  வீரப்பன் தொடரில் வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். க்ரிமினல் சைக்காலஜி படிக்கும் ஒரு மாணவி, வீரப்பன் பற்றிய ஆய்வில் இறங்கும்போது வீரப்பன் பற்றிய செய்திகளை அவரது கோணத்தில் சொல்வதுபோல கதை நகரும். அந்த மாணவியாக எனது மகள் விஜயதா நடிக்கிறார்.ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் என்ற கணக்கில் மொத்தம் 20 மணி நேரம் வெப் தொடர் இருக்கும். இதுவரை நூறு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி 6 எபிசோட் தயாராகவுள்ளது. மொத்த பட்டப்பிடிப்பும் முடிந்து மார்ச் மாதத்திற்கு பிறகு வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர் தயாராகிறது. வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது”.

 • 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் ப்ரியாமணி!!

  “DR 56” என்னும் படத்தில் ப்ரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்கவுள்ளார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி இப்பொது ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் “DR 56″ படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. பாலாஜி வெளியிடுகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.

  ப்ரியாமணி பேசுகையில்:

  “ ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம்  ‘ DR 56 ’ என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், ”நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்”னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்திருக்கு.இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

  இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படம். இதில் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். இந்த கதையை எழுதி, தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகும் ப்ரவீன், மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். சமூகத்துக்கு தேவையான மெசேஜ் உள்ள இந்தப்படத்தை அக்கறையுடன் வெளியிடும் ஏ.என். பாலாஜி சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பத்து வருடம் கழித்து நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை” என்றார்.

  தயாரிப்பாளருமான ப்ரவீன் ரெடி பேசுகையில்:

  “இது எனக்கு முதல் படம்தான். ப்ரியாமணி நடிக்க சம்மதித்தப்பிறகே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். ஒருவேளை அவர் நடிக்க மறுத்திருந்தால் இந்த படமே வந்திருக்காது.  நம் வாழ்க்கையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் தொகுப்பே இந்தக் கதை. ‘ DR 56 ’ என்றால் படத்தின் நாயகன் 56 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு மாத்திரை போட வேண்டும். அப்போதுதான் அவன் உயிருடன் இருப்பான். அது ஏன்? எப்படி? என்று நீங்கள் கேட்டால் படம் பார்க்கும்போது அதை புரிந்துகொள்வீர்கள்.”என்றார்.

  ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை வெளியிடும் A.N. பாலாஜி, பேசுகையில்:

  படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. குறிப்பா படத்தின் இரண்டாம் பாதி மிகச்சிறப்பா வந்திருக்கு. அறிமுக இயக்குனர் மற்றும் நாயகனுக்கு இது முதல் படம் போலவே தெரியாது. அந்த அளவுக்கு அவர்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள் ” என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கெளரவ், ராகவன், ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

  ’கேஜிஎஃப்’, ’காந்தாரா’ படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் இப்படத்திற்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார். ’சார்லி 777’ புகழ் ’நோபின் பால்’ இசையமைத்துள்ளார். வசனம் சங்கர் ராமன் எழுதியிருக்கிறார்.ஒளிப்பதிவு ராகேஷ் சி.திலக், பாடல்கள் சரவணவேல், S.K.சங்கர் ராமன்.

  இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா பேசுகையில்:

  “இந்த கதையை ப்ரவீன்தான் எழுதினார். இது ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும்.  இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ப்ரவீன் மற்றும் ப்ரியாமணிக்கு எனது நன்றி”என்றார். 09-12-2022 தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘ DR 56 ’. வெளியாகிறது.

 • மகாபா மற்றும் விஜயின் பாடல் வெளியீடு..!!

  இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை காத்தவராயன்..’ எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.

  ”பின்னால வந்த எவனும்  வெளங்குனதில்ல..’ என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

  ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் வலம் வரும் ‘பட்டிமன்றம்’ எனும் விசயத்தை கையிலெடுத்து விளம்பரப்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் பாடலின் காணொளி இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

  பாடலில் மா.கா.பா ஆனந்த், ஆர். ஜே. விஜய், ஆஷ்னா ஜாவேரி மூவரின் தோற்றமும், நடனமும், பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 • உதயநிதி துவக்கிவைத்த “வாழை” திரைப்படம்..!!

  தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

  “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

  சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

  இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

  தொழில்நுட்ப குழு விவரம்

  எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ், ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் , இசை – சந்தோஷ் நாராயணன் கலை இயக்கம் – குமார் கங்கப்பன், படத்தொகுப்பு  – சூரிய பிரதமான், சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன், நடனம் – சாண்டி, பாடல்கள் – யுகபாரதி, வெயில் முத்து, உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா, ஒலி வடிவமைப்பு – சுரேன் G, ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன், உடைகள் – ரவி தேவராஜ், மேக்கப் – R கணபதி, விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM),எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வெங்கட் ஆறுமுகம்,தயாரிப்பாளர் – திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்,

  இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • விஜயின் கண்ணத்தை கிள்ளிய ரசிகர்.. கார் கண்ணாடியை மூடிய தளபதி!!

  வம்சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வாரிசு படத்தில் நடிக்கும் விஜய் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.விஜயின் வருகை அறிந்து ரசிகர்கள் அங்கு கூடினர்.அங்கு மீட்டிங் முடிந்ததும் விஜய் காரில் வீடு திரும்பினார்.

  செல்லும் வழியில் அவரை பார்க்க ஆசைப்பட்டு நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு காரில் இருந்து டாடா காட்டி கொண்டிருக்கையில் ரசிகர் ஒருவர் விஜயின் கன்னத்தினை கிள்ளி முத்தமிட்டுள்ளார்,உடனே விஜய் கார் கண்ணாடியை மூடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  சற்றே பதறிய தளபதி எந்த ஒரு முக சுழிவும் இல்லாமல் சிரித்துகொனண்டே கண்ணாடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

 • ராஜ்கிரண், அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’!!!

  ‘பட்டத்து அரசன்’ படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுப்பதோடு தனி ஒரு குடும்பம் ஒரு ஊரையே எதிர்த்து கபடி விளையாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

  லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள  திரைபடம் ”பட்டத்து அரசன் ”. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

  சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும்  25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த  படம் இந்த ”பட்டத்து அரசன்”.

  இயக்குனர் சற்குணம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது:

  தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா அப்பா பேரன் மாமன் மச்சான் என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்டேன். அது என்னை பாதித்தது உடனே நேரடியாக சென்று அவர்களிடம் பேசி அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் இருப்பினும் அவர்கள் சொன்ன விஷயம் ஒரு படம் எடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் அதனுடன் என்னுடைய கற்பனை கதையை சேர்த்து திரைக்கதையை உருவாக்கினேன். அதேபோல் தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்த பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்துள்ளேன். இதுகுறித்து ராஜ்கிரனிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல் மற்ற வீரர்களின் பெயர்களும் தமிழகத்தில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைக்குமாறு கூறினார். நானும் அப்படி வைத்தால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என நினைத்து எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன்.

  இதன் கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்துள்ளேன். அங்கு வெற்றிலை தோட்டம் வைத்துள்ள குடும்பம் தான்  ராஜ்கிரனின் குடும்பம். தார பங்கு என்ற விளக்கத்தின் அடிப்படையில் ராஜ்கிரனின் இரண்டு தாரங்களுக்கும் தனது சொத்தை சமமாக பிரித்துக் இதனால் முதல் தாரத்தின் மகனுக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுக்கும் விரோதம் ஏற்படுகிறது இதன் காரணமாக ஊர் பிரச்சனை ஏற்பட்டு ஒரு குடும்பம் ஊரை எதிர்த்து கபடி விளையாடும் விதைக்கு தள்ளப்படுகிறது இதுதான் அந்த படத்தின் மைய கரு.

  இதில் கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. முழுவதுமே கபடி விளையாட்டாக இருக்காது. இதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் பேக்காக வந்துள்ளது.

  ராஜ்கிரண், அதர்வா கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளது. அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் ஆஷிகா ரங்கநாத் முதல் முறையாக தமிழில் விளக்கமான வந்து செல்லும் கதாநாயகி போல் இல்லாமல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ராதிகா ஆர் கே சுரேஷ் ஜெய் பிரகாஷ் ஆகியோருக்கும் அழுத்தமான காமெடி தனியாக இல்லாமல் கதைக்குள் சிங்கம்புலியின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும்.அதேபோல் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. சூட்டிங் முடிந்த பிறகு ஜிப்ரான் இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டார். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் எனக்கு சிறப்பான இசையை தர வேண்டும் என்ற காரணத்தினால் அந்த நேரத்தை எடுத்துக் கொண்டதாக கூறினார். பின்னணி இசை உடன் படத்தை பார்த்தபோது வேற லெவலில் இருந்தது எந்தவித கரக்சனும் நான் ஜிப்ரானிடம் சொல்லவில்லை.

   அதேபோல் வெற்றிலை தோட்டம் என்பது இதுவரை சினிமாவில் அவ்வளவாக காட்டப்படாத பேக்ட்ராப். அதை அழகாக தனது கேமராவில் லோகநாதன் படம் பிடித்துள்ளார். அதேபோல் லைக்கா நிறுவனம் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தேவையான பட்ஜெட்டையும் கொடுத்து இந்த படத்தை ஒரு பிரமாண்ட படமாக உருவாக்கி தந்துள்ளனர். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார் அவர்களுக்கும், தலைமை நிர்வாகி தமிழ் குமரன் சார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டத்து அரசன் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து எனது முந்தைய படங்களுக்கு தந்த ஆதரவை இந்த படத்திலும் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

 • சத்யராஜ் சாருடன் சேர்ந்து நடிக்கும் இளம் நாயகன் ரோஷன்!!

  மோகன் டச்சு இயக்கத்தில் “அனகாரன் ” என்ற  படத்தில் புரட்சி தமிழின் சத்யராஜ் அவர்கள் நடித்து வருகிறார் அவரோடு சேர்ந்து நடிக்கும் புது முகமான ரோஷன் பிரபல திரைப்பட எடிட்டர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்’ ன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூரில் விஷூவல் கம்யூனிகேஷன் பயின்று, அதன் பின் டைரக்‌ஷன் துறையில் பணியாற்றி, “புத்தப் போர்” என்று குறும்படத்தை நடித்து இயக்கி அதன் மூலம் பல விருதுகளைப் பெற்றவர் !

  “உற்றான் “திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ரோஷன்.

 • சசிகுமாரின் ‘காரி’ நவ-25ல் வெளியீடு!!

  சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது ‘காரி’.

  காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும்  நடிகர் சசிகுமார். சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். 

  படத்தின் கதாநாயகியாக புதிய வரவான  மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் மோதும்  வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி  நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  எல்லை தெய்வமான  காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 • சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

  சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிட்டனர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் பேசுகையில்:

  இயக்குனர் சத்ய சிவா பேசுகையில்:

  இந்தத் திரைப்படத்தில் புதியதாக  சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.  படமாக நீங்கள் அதனை பார்க்கும் பொழுது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும். ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில்  சிறிது சிரமம் இருந்த போதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்த போதிலும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் கதையை தொலைபேசியின் வாயிலாக கொரோனா ஊரடங்கின் போது சசிகுமாருக்கு எடுத்துரைத்த பொழுது, வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உடனே சம்மதித்தார். தனக்குள் இருக்கும் இயக்குனரை மறந்து ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

  இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே !  இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான்.

  ஒளிப்பதிவாளர் ராஜாவை பாராட்டி தான் ஆக வேண்டும். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒன்று இரவு  நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது. இயலாது என முகம் சுளிக்காமல் முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் அவர் பணி புரிந்தார். நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனை தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்கு தெரிவார்.பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நான் எதிர்பார்த்தவற்றை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

  இத்திரைப்படத்திற்கு பின் விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை பார்த்தால் நிச்சயம் ஒரு விதமான பயம் ஏற்படும்.  சசிகுமார் மீது சிவப்பு சாயம் கொண்ட ஒரு வாலியை ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு! அது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒரே நாளில் காட்சி அமைக்கலாம் என திட்டம் தீட்டினோம். எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்தோம். இப்படி உருவானதே அந்த சண்டை காட்சி.

  KNACK ஸ்டுடியோஸ் ஒலிப் பொறியாளர் உதயகுமார் பேசுகையில்:

  இந்தத் திரைப்படம் ஒலியை சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது. எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது.

  படத்தின் தொகுப்பாளர் NP ஸ்ரீகாந்த் பேசுகையில்:

  நான் கல்லூரியில் படித்த காலத்தில் சசிகுமாரை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். தற்பொழுது அவருடன் பணியாற்றுகிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் புதியதாக ஒரு தொகுப்பு முறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

  படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்:

  இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன். படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும்.நானும் சசிகுமாரும் குட்டி புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம். படத்தின் வெளியீட்டிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

  படத்தின் நாயகி ஹரிப்ரியா பேசுகையில்:

  செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல் பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்.

  சசிகுமார் பேசுகையில்:

  காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

  “படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு” என்று தன் பாணியில் உரையை முடித்தார். இவருக்கு அடுத்த வாரம் காரி என்ற படம் வெளியாக உள்ளது என்பதனையும் தெரிவித்த அவர் தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதனை தெரிவித்தார்.

 • இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆர். பார்த்திபன் ஐயா….

  மக்களை தனது நடிப்பு, பேச்சு மற்றும் நகைச்சுவைகளின் மூலமாக கவர்ந்து
  இன்றளவும் பல்கலை வித்தகனாக வலம் வரும் நடிகரும், இயக்குநருமான திரு மூர்த்தி என்ற ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

  தனக்கென தனித்துவமான, வித்தியாசமான பாணியை சிறு சிறு விஷயங்களில் கூட கையாள்பவர் இயக்குனர் திரு.பார்த்திபன்.

  சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்தவர். திரைப்படங்களில் மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராக பணியாற்றி கொண்டே வாய்ப்பு தேடிய நிலையில் ராணுவ வீரன், தூரம் அதிகமில்லை, பார்வையின் மறுபக்கம், போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் பார்த்திபன், இடையில் வாடிக்கை மனிதர்கள் படத்தில் வசனம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது வாய்ப்பு தேடுவதற்காக இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் அலுவலகங்களுக்கு செல்லும் போது இயக்குனர் G.m. Kumar (அப்போது அவர் இயக்குனர் பாக்யராஜிடம் இணை இயக்குநர்)இவருடைய பணிவு, திறமை இவற்றை கண்டு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார்.


  பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு “தாவணி கனவுகள்” திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் தபால் காரராக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் நடிக்கும் பேறு வேறு. அந்த படத்தில் மக்களின் கவனத்தை பெறும் அளவுக்கு இயல்பாக,சிறப்பாக நடித்திருந்தார்.பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் முதலில் இயக்கி வெளிவந்த படமாக “புதிய பாதை” திரைப்படம் அமைந்தது.
  இவரே கதாநாயகனாகவும் நடித்தார். திரைப்படங்களின் போக்குக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தும் திரைப்படமாக அந்த திரைப்படம் அமைந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதும், மாநில அரசு விருதும் பெற்றார்.

  தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த “,பொண்டாட்டி தேவை” திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் வெளிஇயக்குனர்கள் படங்களில் ஆர் சுந்தர் ராஜன் இயக்கிய “தாலாட்டு பாடவா”, “உன்னை வாழ்த்தி பாடுகிறேன்” எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் “தையல் காரன்,” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆர் சுந்தர் ராஜன் இயக்கிய தாலாட்டு பாடவா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் அமைந்த பாடல்களும் இன்றளவும் புகழ்பெற்ற பாடல்கள். தொடர்ந்து மீண்டும் தயாரித்து, இயக்கி, நடித்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட “சுகமான சுமைகள்”திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியாக அவருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

  சிறிது காலம் கழித்து மீண்டும் இயக்கி நடித்த “உள்ளே வெளியே”என்ற ஜனரஞ்சக திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை பெற்றார். அடுத்து இயக்கி நடித்த “சரிகபபதநீ” திரைப்படம், இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்மறை விமர்சனத்தை பெற்றாலும் பொருளாதார ரீதியாக வெற்றி அடைந்தது. அடுத்து இயக்கி கதாநாயகனாக நடித்த “புள்ளகுட்டிகாரன்,” கதாநாயகனாக நடித்த “டாட்டா பிர்லா,’ போன்ற படங்களில் நடித்து ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இயக்குனர்சேரன் முதன் முதலில் இயக்கிய “பாரதிகண்ணம்மா”திரைப்படம் இவருடைய நடிப்பில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. கீழ் ஜாதி இளைஞர், உயர் ஜாதி பெண்ணை காதலிப்பது போன்ற திரைக்கதை அமைந்த “பொற்காலம் “திரைக்கதை பரபரப்பாக பேசப்பட்டது. வர்த்தக திரைப்படங்களின் போக்கை உடைத்து வித்தியாசமான திரைப்படங்கள் தரவேண்டும் என்ற வேட்கை கொண்ட பார்த்திபன் அன்றைக்கு முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் யாரும் ஏற்று நடிக்க தயங்கும் பாத்திரத்தில்” ஹவுஸ் புல்” என்ற திரைப்படத்தில் வயதானவராக நடித்து இயக்கி தேசிய விருதும் பெற்றார்.

  பிரிந்த மனைவியை பற்றி பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியது:

  ஒரு முத்தத்தின் சத்தத்தைக்கூட ஒரு கோடி வார்த்தைகளில் நான் கோர்த்துக் கோர்த்து அழகாக, எதிர்பாராத, மிக வித்தியாசமான அழகான வார்த்தைகளில் அவளை நான் புகழ்வது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எதை இழந்தாலும் அவளை இழக்கக் கூடாது என்கிற என் முனைப்பு அவளுக்குச் சிறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் முதன்முதலில் தேனிலவுக்குப் போனது டெல்லிக்கு. இந்தியாவின் உயர்ந்த விருதைக் கொண்டுவந்து அவள் கால்களில் ஒப்படைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவளுடைய பாதங்களுக்கு ஈரத்தோடு முத்தமிட்டது. அதெல்லாம் அவளைப் பரவசப்படுத்தும் என நினைத்து என்னை நான் பரவசப்படுத்திக்கொண்டேன்.”

  தன் மனைவியின் காதலுக்காகவே வாழ்ந்த பார்த்திபன் அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள வில்லை. இணைந்து வாழவில்லை என்றாலும் குழந்தைகளின் நலனுக்காக அவர்களின் இரண்டு மகள்களின் திருமணத்தை இணைந்தே நடத்தினார்கள்.

 • தலைவர் ஆனார் Dr. ஐசரி K. கணேஷ் !!!!

  டெல்லியில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுருக்கிறார்.

  இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

  மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

  Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • பிரேக்கிங் நியூஸில் வருகிறார் நடிகர் ஜெய்!!!

  நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கிறார். தனி ஹீரோவாக மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களோடு நடித்து தன தனித்துவத்தை காட்டியுள்ளார் நடிகர் ஜெய். ஆனால் இந்த  படத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க அதை விரைவில் பார்த்து ரசிக்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

  இந்த படத்தின் எடிட்டர் –அந்தோணி, கலை- NM மகேஷ், சண்டைப் பயிற்சி- ஸ்டன்னர் சாம், நடனம் – ராதிகா, பின்னணி இசை- LV முத்து கணேஷ், ஒலி வடிவமைப்பு- ரமேஷ், சவுண்ட் எபெக்ட்ஸ் – ரேண்டி,, எழுத்து & இயக்கம் – ஆண்ட்ரூ பாண்டியன், ஒளிப்பதிவு ஜானிலால், செவிலோ ராஜா, விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.

  கூடிய விரைவில் வெளியாகும் இந்த BREAKING NEWS’க்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

 • ட்ரெண்டிங் ஆகும் ‘காடுன்னா திரில்லு தானடா’ பாடல்!!!

  மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் ‘காடுன்னா திரில்லு தான டா…’

  வருண் தவானும் அவரது ஓநாய் கூட்டமும் நடனமாடும் ‘காடுன்னா திரில்லு தான டா…’ பாடல் சுறுசுறுப்பான இசையும் விறுவிறுப்பான நடன அசைவுகளையும் கொண்டதாகும். அபிஷேக் பேனர்ஜி மற்றும் பாலின் கபக் ஆகியோருடன் வருண் தவான் மற்றும் கீர்த்தி சனோன் நடனமாடும் இப்பாடல் திரையரங்கில் ரசிகர்களையும் ஆட வைக்கும் என்றால் அது மிகையல்ல. இப்பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர், “பழங்குடி இசையை அதன் உண்மைத்தன்மை மாறாமல் இந்தப் பாடலின் வழியாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். பாடகர்கள் விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் தங்களின் உணர்வுப்பூர்வமான குரல் மூலம் இப்பாடலுக்கு உயிரூட்டி உள்ளனர். ‘பெடியா’ திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘தும்கேஸ்வரி…’ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த புத்தம் புது பாடலும் அவர்களை பரவசமூட்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றனர். இந்தி பாடலை விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் உடன் இணைந்து சித்தார்த் பஸ்ரூர் மற்றும் சச்சின்-ஜிகர் பாடியுள்ளனர்.

  இந்த பாடலில் வருண் தவானின் நடனம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்பாடல் மிகப்பெரிய வெற்றியடைவது உறுதி என்றும் அவர்கள் கூறுகின்றனர். வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் பிரமாண்டமான முறையில் வெளியிட உள்ளது. ‘பெடியா’ திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

 • மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல்!!!

  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

  மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

  அவருடைய இணைய பக்கத்தில், ‘:மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என பதிவிட்டிருக்கிறார்.

  மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

 • டிடெக்டிவ் ஏஜென்ட் ஆனார் சந்தானம்!!!

  புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம் Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

  இது ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். அதில் அந்த மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை இயக்குனர் கட்டமைத்திருக்கிறார். கதாநாயகி ரியா சுமன், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், புகழ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்ததாகவும் குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது என்றார் இயக்குனர் மனோஜ் பீதா. வரும் 25ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. என்னுடைய முதல் படமான வஞ்சகர் உலகம் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இந்த படத்திற்கும்  தர வேண்டும் என்றார்.

  வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

  இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டார்.

   அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம்.

   அந்த தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்தது அதை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை. காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று சந்தானம் சாரிடம் சொன்னேன்.அதன் பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார்.நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம்.

  இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார் என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.

 • விக்ரம், சூர்யாவுக்கு பிறகு தர்ஷனைத்தான் பார்க்கிறேன்!!!!

  ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன்  இயக்கும் படம் ‘நாடு’. ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் மற்றும் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்கள்.

  முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

  இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசுகையில்

  “இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

  இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை.. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்று கூறினார்.

  கலை இயக்குனர் இளையராஜா பேசுகையில்,

  “இந்த படத்திற்கு நாடு என டைட்டில் வைத்திருந்ததை பார்க்கும்போது எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசனுக்கு சென்றபோதுதான் அங்கு 28 நாடுகளை எனக்கு காட்டினார் இயக்குனர் சரவணன். அங்குள்ளவர்கள் சமுதாயம், மொழி, இனம் என தங்களுக்குள் ஒரு நாடாக உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம் அவர்கள் எளிமையான மக்கள்.. அங்கே படப்பிடிப்பு நடந்த நாட்களில் நான் கவனித்த அளவில் ஆதிவாசிகள் அவர்கள் அல்ல.. இங்கே இருக்கும் நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள் என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

  படத்தின் நாயகன் தர்ஷன் பேசுகையில்,

  “இயக்குனர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்த படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மகிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்தி பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களை பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்” என்று கூறினார்.

  நாயகி மஹிமா நம்பியார் பேசுகையில்,

  “இந்த படம் குறித்து இயக்குனர் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடம் கதை சொன்னார். அப்போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு நானே அவருக்கு போன்செய்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் அப்படியா என்று சொல்லி ஒப்புக்கொண்டார். அதை கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ  பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதைசொல்லி விட்டாரோ என்று கூட குழம்பினேன். படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம் என நேரிலேயே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன்செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர் தான்.. அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்து விட்டேன் என்றார்..

  ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள்.. இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்த படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம்.. இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன்.

  இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் திருமண விசேஷ வீடுகளில் ஒலிக்கும் விதமாக ஒரு அருமையான குத்துப்பாடல் கொடுத்துள்ளார்கள். தீனா மாஸ்டர் நடனத்தில் அது அற்புதமான பாடலாக உருவாகியுள்ளது. படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்பநிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.

  நடிகர் சிங்கம்புலி பேசுகையில்,

  “கொல்லிமலை பகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நாடு என்று முடியும்படி தான் பெயர் வைத்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல்நாளே, இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை.. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.

  ஒளிப்பதிவாளர் சக்தியின் முழு திறமையை யாரும் பார்த்ததில்லை. இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கென தனியாக கோழிக்குழம்பு ஸ்பெஷலாக தயாராகும்.. அதை சாப்பிடுவதற்கு ஒரு போட்டியே நடக்கும். படத்தின் நாயகன் தர்ஷன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பல இடங்களில் ஒரு பெண்ணை தன் தோளில் தூக்கிக்கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடுவார். காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம் அப்படிப்பட்ட மலைப்பகுதி என்பதால். இதற்கு முன்பாக பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் பணியாற்றியபோது அந்த ஹீரோக்களின் கடின உழைப்பை  நேரில் பார்த்தவன் நான். அதனால் தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன்.. நிச்சயமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல உயரம் இருக்கு..

  இந்தப்படத்தின் டப்பிங்கின்போது வசனம் பேசும் இடைவேளையில், சில வரிகள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.. இதை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் எனக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு தருவார் என நினைத்தேன். கடைசியாக இந்த படத்தில் இரண்டு வரிகள் பாட இயக்குனர் வாய்ப்பு தந்தார்” என்று கூறினார்.

  நடிகர் அருள்தாஸ் பேசுகையில்,

  “கமர்சியல் படங்கள் நிறைய வருகின்றன. ஆனாலும் சிறிய படங்கள்தான் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. இந்தப்படமும் அப்படி ஒரு இடத்தை பெறும். தங்கள் முதல் படமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்வேன். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்குமான ஒரு படம்.. நாயகன் தர்ஷன் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பை கொடுத்துள்ளார்.. நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இது அமையும்.. அதேசமயம் வளர்ந்த பின்பு அவர் மாறிவிடக்கூடாது” என்று பேசினார்.

  இந்த படத்தின் தயாரிப்பாளர் சக்ரா பேசுகையில்,

  “நாடு என்பதை இயக்குனர் சரவணன் அவரது பார்வையில் என்னவென்று சொல்லி இருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கே அது தெரியும்” என்றார்.

  இசையமைப்பாளர் சத்யா பேசுகையில்,

  “எனக்கு இயக்குனர் சரவணனுக்கும் அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதால் தான் தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருவது எளிதாக இருக்கிறது. இந்தப்படத்தை எடுத்து முடித்தபின் பார்த்தபோது இதற்கு பின்னணி இசை மிகப்பெரிதாக தேவைப்படுகிறது என்பதை உணர முடிந்தது. அதற்கேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

  படத்தொகுப்பாளர் பொன் கதிரேசன் பேசுகையில்,

  “இந்தப்படம் எனக்கு இரண்டாவது படம்.. ஆனால் எட்டு வருடமாக இப்படி ஒரு படத்திற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது நிச்சயமாக படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த இடத்திற்கே சென்றுவிட்டது போல உணர்வார்கள்” என்றார்.

  ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசுகையில்,

  “கொல்லிமலை பின்னணியில் இந்தப்படத்தின் கதை நிகழ்கிறது என்று சொன்னபோது, நிச்சயமாக இதை வித்தியாசமான படமாக உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றபடி இதுவரை சினிமாவின் காலடி படாத பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்” என்று கூறினார்.

 • பாராட்டை குவிக்கும் ரங்கோலி ‘யின்  ஃபர்ஸ்ட் லுக்!!!!

  ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர். 9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி”திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.    

  Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.

  ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பங்களையும் பற்றி கூறும் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.

  தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

  பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 • ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம் ‘சிங்கப்பூர் சலூன்’ !!!!!!

  தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’  எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி

   நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி

  இதற்கு முன்பு தான் நடித்திருந்த படங்களின் வெற்றி மூலம் வர்த்தக வட்டாரத்தில் நல்லதொரு வசூல் செய்து வியாபாரம் கொடுத்திருக்கிறார். அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது. இப்போது, சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இயக்குநரான கோகுலுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

  இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆர்.ஜே. பாலாஜி- டாக்டர் ஐசரி கே கணேஷ் இணை, இயக்குநர் கோகுலுடன் (ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா புகழ் இயக்குநர்) இணைந்திருக்கிறது. நிச்சயமாக இந்தக் கூட்டணி பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான ஒரு கதையைத் தரும்.

 • மீண்டும் கதாநாயகன் ஆகிறார் ராமராஜன் !!!!

  23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் “மக்கள் நாயகன்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.

  இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

  வித்தியாசமான கதையம்சம் கொண்ட,  அதேசமயம் தரமான படங்களைத் தயாரிக்கும்  ‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார், R. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ‘சாமானியன்’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

  இந்தப்படம் தொடர்பாக நேற்று மேஸ்ட்ரோ ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,  நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன்.

  ” இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.

  படத்தின் இயக்குநர் R. ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது,

   “’சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான்.

  காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த  படம் அமைந்துள்ளது.

   தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

   குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.

  ராமராஜனின் பல வெற்றிப்படங்களை இயக்கிய அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

  மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார்.  கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார்.. இந்த படத்தின் வெற்றியின்  அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும்” என்றார்.

  இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

  ‘சாமானியன்’ படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார்.

 • நடிகராகிறார் மைக்செட் ஶ்ரீராம் !!!

  புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது.

  நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை,  படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

  மைக்செட் ஶ்ரீராம் இப்படம் கதை நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது, அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.

  தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் அருள்ராஜ் கென்னடி  இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள்  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 • “லைசென்ஸ்” திரைப்படத்தில் நடிக்கும் பாடகி ராஜலட்சுமி செந்தில்!!!

  பட்டி முதல் சிட்டி வரை பாப்புலராக வலம்வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் “என்ன மச்சான்” மற்றும் “ஊ…சொல்றியா” ஆகிய பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜலட்சுமி செந்தில் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

  தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”.என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது..

  பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது.

  விரைவில் படப்பிடிப்பு துவங்கும் நிலையில் பாடலில் மட்டுமல்லாது நடிப்பிலும் சிறந்து விளங்குவாரா என்று பாடகி ராஜலட்சுமி செந்திலின் ரசிகர்கள் எதிர்பாத்து  காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 • “லவ் டுடே” க்கு குவியும் பாராட்டுகள்!!!!!

  பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் லவ் டுடே மக்களியாடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இக்கால இளைஞர்களுக்கு ஏற்றவாறு அமைத்த இப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது AGS Entertainment  தயாரிப்பாளர் நேரில் பாராட்டியுள்ளார்.

  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை AGS Entertainment தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா, (AGS Entertainment Executive Producer) வெங்கட் மாணிக்கம், (AGS Maali) ஆகியோர் உடனிருந்தனர்.

  மேலும் இந்த படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • பான் இந்தியா படமாக வெளியாகும் “யசோதா’ !!!

  ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து ‘யசோதா’ படத்தின் கதைக் கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது.  கோவையைச் சேர்ந்த சிலத் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகுதான் நானும் என் தரப்பிலிருந்து சில கருத்துகளைச் சொன்னேன். இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.

  தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறியபோது  ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார். அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார். கடைசி வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அவர் கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம். 

  சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும் டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவர் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம். அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.  அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.

  ‘யசோதா’ படத்தின் கதை வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம் என்று தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறினார்.

 • தனுஷ் பாடும் வாத்தி பாடல் !!!!

  வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி இருமொழி படமாக உருவாகியுள்ளது. தெலுங்கில் சர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருமொழி படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

  ஜி.வி.பிரகாஷ் வா வாத்தி (தமிழ்) மற்றும் மாஸ்தாரு மாஸ்தாரு (தெலுங்கு) என்ற முதல் பாடலுக்கு ஒரு கண்ணோட்டம் கொடுத்துள்ளார். இரண்டு பதிப்புகளையும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழ் பதிப்பின் பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். ராமஜோகய்யா சாஸ்திரி தெலுங்கு பதிப்பை எழுதினார். ஸ்னீக் பீக்கில், தனுஷ் பாடலின் இரண்டு பதிப்புகளையும் பாடினார், ஜிவி பிரகாஷ் குமார் பியானோ வாசித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • நவம்பர் 18 இல்  வெளியாகும்  “கலகத் தலைவன்” !!!

  உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவன் திரைப்படம்.

  மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆக்சன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் உதயநிதியுடன், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் எப்போது திரைக்கு வரும் என கேள்வி எழுந்தது.

  இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனமும் பெற்றுள்ளன.

 • கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ !!!

  தரமான, அர்த்தமுள்ள திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.

  கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’ – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு; ராஜு முருகன் இயக்குகிறார்!

  தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை நிரூபித்து வரும் இயக்குநர் ராஜு முருகன்.  அப்படி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் ‘ஜோக்கர்’. தற்போது மீண்டும் இதே கூட்டணி ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் இணைகிறது.

  கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர்.  ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

  25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  ‘ஜப்பான்’ படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.    

  2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கனவே கார்த்தி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்ய ஜிவி பிரகாஷ்குமார் மும்முரமாகத் தயாராகியுள்ளார்.

  மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

 • முடிவுக்கு வரும் ஊரடங்கு!…

  முடிவுக்கு வரும் ஊரடங்கு!…

  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 28-01-2022 […]


 • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு..!

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு..!

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விபரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள், அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலம் முழுமைக்கும் பொருந்தும். தேர்தலுக்கான நடைமுறைகள் முடியும் வரை, இது அமலில் இருக்கும். ஜாதிகள், சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் மக்களிடம் நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்துதல், வெறுப்புணர்வை உருவாக்குதல். கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் […]


 • ஹெலிகாப்டர் மலர் தூவ கொடியேற்றினார் ஆளுநர்..! – குடியரசு தினவிழா கோலாகலம்

  ஹெலிகாப்டர் மலர் தூவ கொடியேற்றினார் ஆளுநர்..! – குடியரசு தினவிழா கோலாகலம்

  இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து கவர்னர் மரியாதை செலுத்தினார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. முப்படை வீரர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்ஆளுநர். இதைத்தொடர்ந்து ஆளுநர் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முப்படைகளின் […]


 • திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.

  திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.

  திருச்சி , திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. தமிழக கமாண்டோ படையின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். பிஸ்டல், இன்சாஸ் என்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி […]


 • ராஜீவ் காந்தி பிறந்தநாள்: இளைஞர்களை கவர்ந்த இராமநாதபுரம் காங்கிரஸ்!

  ராஜீவ் காந்தி பிறந்தநாள்: இளைஞர்களை கவர்ந்த இராமநாதபுரம் காங்கிரஸ்!

  இராமநாதபுரம் , இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே அரியாங்குண்டு கிராமத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடந்தது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடந்தது.காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ம.தெய்வேந்திரன் முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சேவாதள பிரிவு மாநில செயலாளர் எம்.அப்துல் அஜீஸ்,மாவட்ட பொதுச்செயலாளர் […]


 • தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.

  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.

  சென்னை,  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.  9,10,11 மற்றும்12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற அக்டோபர் -1 ம் தேதி முதல் பள்ளிகள் […]


 • அலுவலகம் திறந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்!

  அலுவலகம் திறந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்!

  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிரமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள்,ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து,125 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, தலைமை வகித்தார்.கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன்,மாவட்ட […]


 • “என்ன பாவம் செய்தது சாஸ்திரி ரோடு..?திருச்சி ம. நீ. ம. வழக்கறிஞர் வேதனை.

  “என்ன பாவம் செய்தது சாஸ்திரி ரோடு..?திருச்சி ம. நீ. ம. வழக்கறிஞர் வேதனை.

  தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் சிதிலமடைந்த சாலைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் மட்டத்தில் அதிலும் ஓரவஞ்சனை காட்டுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாநகராட்சி ஆணையரின் பேரில்லம் அமைந்துள்ள தில்லை நகர் பகுதியில் சாலைக் குறைபாடுகள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவற்றை உடனுக்குடன் சரி செய்யும் அதிகாரிகள், பிற பகுதிகளை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது. அந்த வகையில், தில்லை நகரை ஒட்டியுள்ள சாஸ்திரி சாலையும் […]


 • வறட்சி மாவட்டத்தை குளிர்ச்சி படுத்திய வருணபகவான்!

  வறட்சி மாவட்டத்தை குளிர்ச்சி படுத்திய வருணபகவான்!

  தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த திடீர் கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில் திடீரென்று கனமழை பெய்தது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, மஞ்சூர், இராமநாதபுரம், சத்திரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான […]


 • ராம்குமார் வழக்கு: மனித உரிமை ஆணையத்தின் முன் அதிகாரிகள் ஆஜர்!

  ராம்குமார் வழக்கு: மனித உரிமை ஆணையத்தின் முன் அதிகாரிகள் ஆஜர்!

  சென்னை , சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது முதல் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது வரை முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஜூன் மாதம் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த மர்மநபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் […]


 • மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

  மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

  இராமநாதபுரம்‌ மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி, வினோபராஜ், கோமதி என்ற நான்கு பிள்ளைகள். உள்ளது இதில் கோபால் மற்றும் கோமதி ஆகிய இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளனர். அவரது மகன் வினோபாராஜ்க்கும் , கனிமொழிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]


 • வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு!

  வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு!

  கடல் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாது மணலை பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதற்கிடையில், கடந்த 2017-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டதில், கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது மணல்கள் மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 981 டன் இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, 19 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 15 கிடங்குகளுக்கு […]


 • திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

  திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

  திருவண்ணாமலை கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை […]


 • சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்

  சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்

  ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் […]


 • சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் சியான் விக்ரம் கேமியோ?

  சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் சியான் விக்ரம் கேமியோ?

  லூசிபரின் தெலுங்கு ரீமேக் ஆன சிறு 153, சமீபத்தில் படத்தின் பூர்வாங்க வேலைகளை ஒரு சாதாரண பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த படத்தை ஜெயம் மோகன் ராஜா இயக்குகிறார் என்றாலும், சமீபத்திய தகவல்கள் கோலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தில் ஒரு கேமியோவாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருக்க வேண்டும்


 • கமல்ஹாசனும் சூர்யாவும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைவார்களா?

  கமல்ஹாசனும் சூர்யாவும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைவார்களா?

  மலையாள ஒளிப்பதிவாளர்-இயக்குனர் அமல் நீரத் தனது சமீபத்திய பேட்டியில், நட்சத்திரங்கள் இருவரையும் மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருப்பதாகவும், கமல் மற்றும் சூர்யா அதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பெரிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை ஒன்றாகப் பார்ப்போம். ஸ்கிரிப்ட் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், முடிந்ததும் படத் தயாரிப்பாளர் இரண்டு நடிகர்களையும் கதைக்காக சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.


 • அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்…!

  அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்…!

  விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்


 • இந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்!

  இந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்!

  சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன […]


 • செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதி;

  செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதி;

  சென்னை,தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.  இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.  இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்போது, வரும் செப்டம்பர் […]


 • குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

  குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

  ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


 • நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

  நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

  சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு. அவர்களில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து […]


 • மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

  மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

  சென்னை: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்தது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பத்தொடங்கியது. கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு சென்ற […]


 • நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா சென்னையில் காலமானார்

  நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா சென்னையில் காலமானார்

  சென்னை , பிரபல தமிழ் திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் […]


 • குஜராத் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

  குஜராத் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

  கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதையடுத்து இதற்க12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த ‘சைடஸ் கேடிலா’ என்றநிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்ததோடு, அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரியும் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அக்கரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, […]


 • பட்ஜெட் போட தயாராகிறது பாண்டிச்சேரி!

  பட்ஜெட் போட தயாராகிறது பாண்டிச்சேரி!

  புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி கூடுகிறது.புதிய அரசின் முதல் கூட்டமாக அமையும் இதில், அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது. அதேபோல வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் […]


 • பாண்டிச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20ந்தேதிக்கு பிறகு முடிவு – கவர்னர் தமிழிசை

  பாண்டிச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20ந்தேதிக்கு பிறகு முடிவு – கவர்னர் தமிழிசை

  மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் நேற்று (20.8.2021) கொண்டாடப்பட்டதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. இந்நிகழ்வில், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை அஜாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயாில் ஒரு உற்சவமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது. […]


 • திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் செய்ய தடை.

  திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் செய்ய தடை.

  கொரோனாவின் 3 ஆம் அலையானது வரும் நாட்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாதபடி […]


 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு.

  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு.

  சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்க கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 • மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது.

  மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது.

  சிட்னி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா 2021-ல் விருதுகளை வென்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. […]


 • அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

  அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

  சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன். நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும். இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை. குறைபாடுகள் […]


 • கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

  கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

  பெரம்பலூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் காவலர்களுக்கு கலவர கூட்டத்தினை அனுகும் முறையினையினையும், கூட்டத்தினை கலைப்பதற்கு என்ன என்ன யுத்திகளை பயன்படுத்திகிறோம் என்பது குறித்தும் துணைக் காவல் கணகாணிப்பாளர் திரு.சுப்பாராமன் அவர்கள் விரிவாக […]


 • மீண்டும் தடதடக்க தயாராகும் பயணிகள் ரயில்கள்

  மீண்டும் தடதடக்க தயாராகும் பயணிகள் ரயில்கள்

  ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம். பி. வெங்கடேசன் நன்றி. கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், குறைந்த தொலைவிலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல், நீண்ட தூர கோவிட் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், குறைந்த தூர பயணத்திற்காக பாசஞ்சர் ரயில்களை நம்பியிருந்த நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் குறைந்த தூர பேசஞ்சர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]


 • தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்

  தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்

  புதுடெல்லி: மூத்த அதிகாரியான அபூர்வா சந்திரா தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு, சந்திராவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது, பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 • கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’

  கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’

  குமரி மாவட்ட கனிம வளங்கள் சுயநலவாதிகளின் அசுர பசிக்கு இரையாகி வருவதால் குமரியின் இயற்கை சூழலே கேள்விக்குறியாகி வருவதோடு மழை வளமும், நீர் ஆதாரங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் வருங்கால தலைமுறை வாழவே தகுதியற்றப் பகுதியாக குமரி மாவட்டம் மாறிப் போகும் அவலம் எதிர்நோக்கிடும் நிலை உள்ளது. எனவே இதனைத் தடுத்திடவும், இயற்கை வளங்களைப் பாதுகாத்திடவும் வலியுறுத்தி களியக்காவிளை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தெருமுனை பிரச்சார பயணம் பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் 3 நாட்கள் நடந்தது. […]


 • தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

  தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

  சென்னை, இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “ தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன.  தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம். மராட்டியம், கொல்கத்தா போன்ற பகுதிகளில்போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது”.இவ்வாறு அவர் […]


 • தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

  தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

  சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 8 உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா […]


 • நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு .

  நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு .

  நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் நியூசிலாந்து வீரர்களில் சிலர் பாதுகாப்பு குறித்து […]


 • உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி

  உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி

  உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 7-11, 11-1, 8-11, 13-11, 11-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் இணை 11-6, 11-5, 11-4 என்ற […]


 • கன்னியாகுமரி:ஆரல்வாய்மொழி கோவிலில் கும்பாபிஷேகம்.

  கன்னியாகுமரி:ஆரல்வாய்மொழி கோவிலில் கும்பாபிஷேகம்.

  ஆரல்வாய்மொழி வடக்கூர் மேலத்தெரு அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பூதசுத்தி ஆறாம் கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றது தொடர்ந்து 5 மணிக்கு ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, காலை 6.15மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது காலை ஆறு முப்பது மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடங்கள் யாகசாலையை விட்டு […]


 • ஜனாதிபதிக்கு கண் அறுவை சிகிச்சை..!

  ஜனாதிபதிக்கு கண் அறுவை சிகிச்சை..!

  டில்லி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று(19.08.2021) கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. அதாவது, 75 வயதான இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறும் அந்த செய்திக் குறிப்பு, ‘சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவர் தனது ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பியதாகவும் கூறுகிறது.


 • ‘ஜெ’வின் மரண வழக்கு முடித்து வைக்கப்பட்ட விசயம்” பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

  ‘ஜெ’வின் மரண வழக்கு முடித்து வைக்கப்பட்ட விசயம்” பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

  திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.அப்போது, தரிசனம் முடிந்து வந்த அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய அண்ணாமலை, “புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும் என்பது […]


 • மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவு

  மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவு

  மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவடைந்து, 55,382.56 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,489 புள்ளிகளாக உள்ளது.


 • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  புதுடெல்லி, நாட்டில் கொரோனா 2வது அலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாக நாடு முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் […]


 • தமிழகம் முழுவதும் 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழகம் முழுவதும் 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  மீண்டும் ஊரடங்கு…? முதல்வர் இன்று ஆலோசனைகொரோனா தாக்கத்தின் முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரனமாக கொரோனா தாக்கமும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் […]


 • பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’

  பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’

  புதுடில்லி:‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம், பரந்த அளவில் மருந்துப் பொருட்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், உலகளவில் 70 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. புனேவை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், அதன் துணை நிறுவனமான, ‘ஜென்னோவா பயோ பார்மசூட்டிக்கல்ஸ்’ வாயிலாக, கொரோனாவுக்கான ஆர்.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 1,100 கோடி ரூபாய் […]


 • மின்னல் தாக்கி 4 பேர் பலி

  மின்னல் தாக்கி 4 பேர் பலி

  ஷாஹ்தோல்: மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டம் ஜெய்த்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி 15 வயது சிறுவன், 22 வயது இளைஞர் பலியாகினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டம் குதேவா கிராமத்தில் இடியுடன் மழை பெய்ததில், மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.


 • ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

  ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

  10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வரும் 23ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தங்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 […]


 • இன்று சட்டசபை புறக்கணிப்பு; அ.தி.மு.க. அறிவிப்பு

  இன்று சட்டசபை புறக்கணிப்பு; அ.தி.மு.க. அறிவிப்பு

  சென்னை : ”தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை நாளை(இன்று – ஆக.,19) புறக்கணிப்போம்” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தர்ணா முடித்த பின் நேற்று அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில் பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார். அதற்கு உரிய வாய்ப்பு […]


 • திரைப்பட அவதூறு வழக்கு:இயக்குனர் பாலா விடுவிப்பு

  திரைப்பட அவதூறு வழக்கு:இயக்குனர் பாலா விடுவிப்பு

  அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கில் இருந்து இயக்குனர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘அவன்-இவன்’. இந்தப் படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக, சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன், தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு  தொடர்ந்தார். இதனையடுத்து கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் […]


 • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி.

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி.

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக நேற்று அறிவித்தார். அத்துடன் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து 27 வயதான டொமினிக் திம் தனது டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் மற்றும் இந்த […]


 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது

  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது

  20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு அணிகளுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 20.60 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. நைஜீரியா அணி தங்கப்பதக்கத்தையும், போலந்து அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா […]


 • 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

  புதுடெல்லி,16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது. இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் […]


 • தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு..! – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு..! – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் கல்வியில் நாட்டம் இல்லாததால் பல மாணவர்களும் வேலைக்கு செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையும் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தமிழகத்தில் வருகிற […]


 • சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

  சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

  சென்னை:நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின […]


 •          அண்ணாமலை யாத்திரை தள்ளி போக காரணம்!

           அண்ணாமலை யாத்திரை தள்ளி போக காரணம்!

  தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.              இதற்கிடையில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டங்கள் இந்த மாதம் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டதால் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி பாதயாத்திரையை தொடங்க […]


 •  இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி!

   இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டா போட்டி!

  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகளை அறிவித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பிரமாண்டமான மாநாட்டை ஆகஸ்டு 20-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அவர் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இந்த மாநாட்டை நடத்த முடிவு […]


 • ‘அண்ணாமலையின் கருத்து தவறானது’ – சசிகலா..!

  ‘அண்ணாமலையின் கருத்து தவறானது’ – சசிகலா..!

  ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, ஜெயலலிதாவைப் பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். ஜெயலலிதா “மக்களால் நான் மக்களுக்காகவே […]