புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். இதை பார்த்த வினிதா அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டிலேயே சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதனை கண்ட அவரது குடும்பத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநாவுக்கரசின் உடலை நேற்று ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றனர. அங்கு கணவரின் உடலை பார்த்த வினிதா, துக்கத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து வினிதாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தையை இழந்து அந்த 2 குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறது.

By Porkodi