சென்னை, 


தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

  • 9,10,11 மற்றும்12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற அக்டோபர் -1 ம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி.
  • தமிழ்நாட்டில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.
  • இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள புதுக்கூடங்களைத் திறக்க அனுமதி
  • வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி
  • கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

By admin