புதுடெல்லி,
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன், சார்ஜாவில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துனை கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ், டான் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டானியல் சாம்ஸ். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.