செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜய் மக்கள் இயக்கதை சேர்ந்தசிலர் கடத்தி சென்று தாக்கியதாகவும், செய்தி சேகரித்து கொண்டிருந்த போதே ஈசி ஆர் சரவணன் தலைமையிலான குழு அவர்களின் கேமரா செல் போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்து காரில் ஏற்றி சென்றுருக்கின்றனர் என்று செய்திகள் பரவுகின்றன.

வாரிசு படம், அரசியல் என்ட்ரி, காலில் விழும் கலாச்சாரம் என தொடர்ந்து நடிகர் விஜய்யை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த கடத்தல் நிகழ்வு அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குறைவான தியேட்டர்களை ஒதுக்குவது போன்ற தீர்மானத்தை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமானிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அப்படி நடந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் தனது கருத்தை கூறினார்.

செய்திகள் இப்படி பரவிவரும் நிலையில் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கடத்தவில்லை என்றும் மேலும் வாரிசு காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லீக் ஆகி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்கள் சிலர் ட்ரோன் மூலம் வாரிசு படப்பிடிப்பில் நடக்கும் விஷயங்களை படமாக்க நினைத்தனர் என்றும் அதனால் தான் அவர்களை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அழைத்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென செய்தியாளர்கள் அப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும் இடத்தில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர் என்றும் அதன் காரணமாகவே அவர்களை அழைத்து இப்படி பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகி ஈசிஆர் சரவணன் அறிவுறுத்தினார் என்றும் விஜய் ரசிகர்கள் அந்த கடத்தல் சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Porkodi