உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவன் திரைப்படம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆக்சன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் உதயநிதியுடன், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் எப்போது திரைக்கு வரும் என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனமும் பெற்றுள்ளன.

By Porkodi