20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த கலப்பு அணிகளுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 20.60 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. நைஜீரியா அணி தங்கப்பதக்கத்தையும், போலந்து அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வென்ற 5-வது பதக்கம் இதுவாகும்.

By admin