ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். ஏலியன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
சராசரி உலகத்துக்குள் புதிய உலகம் ஒன்றை கொண்டுவந்ததால் அவதார் படமானது சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நாளை 16.12.2022 அன்று அவதார் வெளியாகவும் அதனை காண உலகமெங்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். பாகம் 1’ஐ விட பாகம் 2 மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது.