Home

 • அமித் ஷாவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு! ஆளுநர் ‘எக்ஸ்’ பதிவு!
  டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக விவாதித்தார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஜூலை 15-ம் தேதி டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவர், […]
 • முதல்வரின் வெளிநாட்டு பயணம் மாற்றம்..! பின்னணி இதுதான்?
  தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அமைச்சரவையிலும் மாற்றம் நடந்த பிறகு அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக […]
 • ‘சர்தார் 2’ ஷூட்டிங்கில் ஃபைட் மாஸ்டர் மரணம்..!
  கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் […]
 • நில மோசடி புகாரில் மதுரை ‘மாஜி’!
  கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள் மதுரையிலும் ஒரு முன்னாள் அமைச்சர் நில மோசடி விவகாரத்தில் சிக்கியிருப்பதாக […]
 • கரூர் ‘மாஜி’க்கு உதவிய காவல் ஆய்வாளர் கைது!
  முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலியாக நிலம் கையகப்படுத்து என்ஓசி சான்றிதழ் வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அபகரித்துவிட்டதாக தொழிலதிபர் பிரகாஷ் […]
 • யார் இந்த தீரஜ்குமார்? ஸ்டாலின் ‘டிக்’ அடித்த பின்னணி?
  உள்துறைச் செயலாளராக இருந்த அமுதாவை மாற்றி மூத்த ஐ.ஏ.எஸ்-. அதிகாரி தீரஜ்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக ‘டிக்’ செய்ததன் பின்னணியை தற்போது பார்ப்போம்..! தமிழகத்தில் தொடர் கொலைகள், கள்ளச்சாரய மரணம் என அடுத்தடுத்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சிகள் கூறி வருகிறது. இந்தநிலையில் தான் சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை, கடலூரில் பாமக நிர்வாகி மீது கொலைமுயற்சி, […]
 • ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்!
  சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர் பதவியேற்றுக் கொள்வார்.
 • மணல் குவாரி! அமலாக்கத் துறை வழக்கு ரத்து! ஐகோர்ட் அதிரடி! சொத்துக்கள் மீட்பு!
  தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், தொழிலதிபர்கள் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் மீது அமலாக்கத்துறை […]
 • உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், 10 கலெக்டர்கள் மாற்றம்!
  உள்துறை செயலாளர் அமுதா உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு […]
 • ‘மாஜி’ எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது!
  இடைக்கால ஜாமின், முன் ஜாமின் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை கேரளாவில் கைது செய்யப்பட்டார் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து […]
 • ‘ஷாக்’ கொடுத்த திமுக! அரசியல் கட்சிகள் கண்டனம்!
  தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., […]
 • சிறுபான்மையினர் வாக்குகள்! 2026 கூட்டணி வியூகம்! உற்சாகத்தில் ர.ர.க்கள்!
  சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் மக்களவைத் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி […]
 • குருபெயர்ச்சி 2024… அதிர்ஷ்ட மழை யாருக்கு..?
  ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு ஜூன் மாதம் முதல் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம்மாறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி வரைக்கும் குருவின் நட்சத்திர மாற்றத்தினால் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அஸ்வினி: சொல்வாக்கும் […]