துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா பாடல் நேற்று வெளியானது.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடலில் ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க சியர்ஸ்,போனது போகட்டும் தேவையில்ல டியர்ஸ்..புடிச்சது செய்றது என்னைக்குமே மாஸ்..தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர் பீஸ்’

இப்படி பல மோட்டிவேன் வரிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடல் வரிகள் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.அஜித் என்றாலே நிச்சயம் பைக் காட்சிகள் கட்டாயம் படத்தில் இருக்கும். இந்த படத்திலும் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

படத்தில் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கிறது என ஹெச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். படத்தின் போஸ்டர் மற்றும் புதிய ஸ்டில்ஸ்களை படக்குழு வெளியிட்டது.அந்த புகைப்படங்களில் அஜித் பார்க்க செம்ம ஸ்டைலாக இருந்தார். புகைப்படத்தை பார்த்த பிறகு அஜித் இதில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்ற தகவலும் பரவி வந்தது.

இந்த பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 24 நேரத்திற்குள்ளேயே யூடியூபில் 10 மில்லியன் வியூஸ் பெற்று ’சில்லா சில்லா’ பாடல் சாதனை படைத்துள்ளது.

By Porkodi