சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்

ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் […]

தொடர்ந்து படிக்க

சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் சியான் விக்ரம் கேமியோ?

லூசிபரின் தெலுங்கு ரீமேக் ஆன சிறு 153, சமீபத்தில் படத்தின் பூர்வாங்க வேலைகளை ஒரு சாதாரண பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த படத்தை ஜெயம் மோகன் ராஜா இயக்குகிறார் என்றாலும், சமீபத்திய தகவல்கள் கோலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தில் ஒரு கேமியோவாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருக்க வேண்டும்

தொடர்ந்து படிக்க

கமல்ஹாசனும் சூர்யாவும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைவார்களா?

மலையாள ஒளிப்பதிவாளர்-இயக்குனர் அமல் நீரத் தனது சமீபத்திய பேட்டியில், நட்சத்திரங்கள் இருவரையும் மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருப்பதாகவும், கமல் மற்றும் சூர்யா அதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பெரிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை ஒன்றாகப் பார்ப்போம். ஸ்கிரிப்ட் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், முடிந்ததும் படத் தயாரிப்பாளர் இரண்டு நடிகர்களையும் கதைக்காக சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படிக்க

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்…!

விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்

தொடர்ந்து படிக்க

நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா சென்னையில் காலமானார்

சென்னை , பிரபல தமிழ் திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் […]

தொடர்ந்து படிக்க

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது.

சிட்னி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா 2021-ல் விருதுகளை வென்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. […]

தொடர்ந்து படிக்க

நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் திடீர் சந்திப்பு …!

சென்னை, புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது.  புதுச்சேரியில் தங்கியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி நேற்று மாலை  […]

தொடர்ந்து படிக்க

திரைப்பட அவதூறு வழக்கு:இயக்குனர் பாலா விடுவிப்பு

அவன் இவன் திரைப்பட அவதூறு வழக்கில் இருந்து இயக்குனர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘அவன்-இவன்’. இந்தப் படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக, சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன், தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு  தொடர்ந்தார். இதனையடுத்து கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் […]

தொடர்ந்து படிக்க

விஷாலுக்கு எதிரான லைகா மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, மருது திரைப்பட தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம், 21.29 கோடி ரூபாயை, நடிகர் விஷால் கடனாக பெற்றார். அதை திருப்பிச் செலுத்த முடியாததால், தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி, அன்புச்செழியனிடம் தான் பெற்ற கடனை அடைக்குமாறு, விஷால் கோரிஉள்ளார். அதன்படி விஷாலின் கடனை, லைகா நிறுவனம் அடைத்துள்ளது. இதையடுத்து, 2019 செப்., […]

தொடர்ந்து படிக்க

நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை,நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன், பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். திரைப்பட நடிகை மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டாா். அதில் குறிப்பிட்ட ஜாதியினரை அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சேர்ந்த இயக்குநா்கள், நடிகா், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தாா். அவா்களை திரைத்துறையில் […]

தொடர்ந்து படிக்க