சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள்.

தமிழ் திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் அன்று தனது வீடு முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை சந்திப்பார். வாழ்த்து கூற காத்திருக்கும் தனது அன்பான ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வார். இந்த வருடம் வழக்கம் போல போயஸ்கார்டன் வீடு முன்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்தை சந்திக்க முடியவில்லை. காரணம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்றுள்ளாராம்.

மழையில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பிறந்தநாளில் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் வீட்டில் இல்லாதது தெரியாமல் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். இந்த ஆண்டு தலைவரை சந்திக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் பலரும் திரும்பி சென்றனர். இதனிடையே ரசிகர்களுக்கு முக்கிய விருந்தாக ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Porkodi