‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர். என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து ‘யசோதா’ படத்தின் கதைக் கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது.  கோவையைச் சேர்ந்த சிலத் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகுதான் நானும் என் தரப்பிலிருந்து சில கருத்துகளைச் சொன்னேன். இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறியபோது  ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார். அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார். கடைசி வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அவர் கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம். 

சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும் டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவர் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம். அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.  அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.

‘யசோதா’ படத்தின் கதை வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம் என்று தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறினார்.

By Porkodi