உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 7-11, 11-1, 8-11, 13-11, 11-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் இணை 11-6, 11-5, 11-4 என்ற நேர்செட்டில் பெலாரசின் அலியாக்சன்ட் ஹனின்-டாரியா டிரைகோலோஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.