தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி
நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி
இதற்கு முன்பு தான் நடித்திருந்த படங்களின் வெற்றி மூலம் வர்த்தக வட்டாரத்தில் நல்லதொரு வசூல் செய்து வியாபாரம் கொடுத்திருக்கிறார். அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது. இப்போது, சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இயக்குநரான கோகுலுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆர்.ஜே. பாலாஜி- டாக்டர் ஐசரி கே கணேஷ் இணை, இயக்குநர் கோகுலுடன் (ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா புகழ் இயக்குநர்) இணைந்திருக்கிறது. நிச்சயமாக இந்தக் கூட்டணி பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான ஒரு கதையைத் தரும்.