சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 நாளை மறுநாள் (டிச.12) ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று பாபா படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது. 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ’பாபா’.

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்த பாபா படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. பிருந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக இப்படத்தில் பணிபுரிந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இந்நிலையில் பாபாவை ரீ ரிலீஸ் செய்வதாக முன்னதாக ரஜினிகாந்த் அறிவித்ததை அடுத்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. நாளை மறுநாள் (டிச.12) ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று பாபா படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது.

ராசிகார்கிலைடையே பெரும் ஆதரவையும் வரவேற்ப்பையும் இந்த பாபா படம் பெற்றுள்ளது. ஒரு சில காட்சிகளை எடிட் செய்தும் ஒரு சில காட்சிகளை அழகாக மாற்றி அதற்கேற்றாற் போல் மக்களை கவர்ந்து உள்ளனர். அதுவே படத்தை வெற்றி பெற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Porkodi