பஞ்ச் டயலாக், ஸ்டைல், அசத்தலான நடிப்பு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கென்று ஓர் ரசிகர் கூட்டத்தை இன்று வரை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ஒரே மனிதர் இவர்.

தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 72. ’16 வயதினிலே’ படத்திலேயே ‘இது எப்படி இருக்கு’ என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம் சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற “சும்மா அதிருதுல்ல’ வரை தொடர்ந்து தற்போது 2.0 சிட்டி ரோபோவே பஞ்ச் அடிக்கும் வரை பட்டையை கிளப்பினார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் இரசினிகாந்து புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் இரசினிகாந்து ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரசினிகாந்து ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.

இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் இரசினிகாந்து. ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து இரசினிகாந்து அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.

அனால் இப்போது 10.12.2022 அன்று மறுபடியும் பாபா படத்தை சூப்பர் ஸ்டார் அவர்கள் ரீரிலீஸ் செய்தார். அன்று படு தோல்வி அடைந்த பாபா திரைப்படம் இன்று ரசிகர்களால் கொண்டாட படுகிறது. சிறிது எடிட்டிங் மற்றும் மாற்றங்கள் செய்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார் ரஜினிகாந்த்.

By Porkodi