2008ம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கங்கனா ரனாவத்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு இசைமைத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி கங்கனா ரனாவத்  அதற்கு பிறகு பாலிவுட்டில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நடிகை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது சகோதரிக்கு நடந்த ஆசிட் வீச்சு குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று 17 வயது சிறுமி ஆசிட் வீசப்பட்டதன் எதிரொலியாக பாலிவுட் நடிகை  கங்கனா ரனாவத்  தனது சகோதரிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்த உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

எனது சகோதரி ரங்கோலி சாண்டல் 21 வயது இருக்கும் போது எவனோ ஒரு ரோடு சைடு ரோமியோ ஆசிட் வீசி சென்றுவிட்டான். அவன் செய்த அந்த பயங்கரமான காரியத்தால் கிட்டத்தட்ட என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எங்கள் குடும்பத்தால் அந்த துயரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் எங்களின் ஒட்டுமொத்த குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளானது. அதன் காரணமாக ஒவ்வொரு முறை என்னை யாராவது கடந்து செல்லும் போதெல்லாம் என் மீதும் ஆசிட் வீசி விடக்கூடும் என்ற பயத்தால் நானும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

ஒரு பைக் அல்லது ஒரு கார் என்னை தாண்டி செல்லும் போது எனது முகத்தை நான் மூடி கொள்ளும் அளவிற்கு என் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற அட்டூழியங்கள், வன்முறைகள் நின்ற பாடாக இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என ஒரு குறிப்பை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.  

By Porkodi