சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 8 உயர்ந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன.

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. எனினும் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.4465- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35720-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38632-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை,

வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000 ஆக உள்ளது.

By admin