Month: April 2024

கை விரித்த மகன்கள்! கையை பிசையும் ஓபிஎஸ்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பளார் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தான். அந்தளவிற்கு தேர்தல் வியூகமும், விட்டமின் வியூகமும், வாங்கிய சத்தியமும் அவருக்கு கைகொடுத்தது. இந்த நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.ஸை அவரது மகன்கள்…

வெயிலுக்கு பீர் உற்பத்தியை அதிகரிக்க ஆணை! அன்புமணி வேதனை!

‘கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா… மது வணிக நிறுவனமா?’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெப்பம்…

விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் எப்போது..?

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல், எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு…

ரூ.4 கோடி பறிமுதல்..! 2 பேருக்கு சம்மன்..! விசாரணைக்கு பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பெருமால் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை…

தேசத்தின் வளங்களின் மீது ஏழைகளுக்கு தான் முதல் உரிமை: ப.சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இல்லை என்பதாலேயே பிரதமர் மோடி பாஜக தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்…

கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!

கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே…

சந்திரபாபு நாயுடு வாகனத்தில் ஏறிய மர்ம நபர்கள்; போலீசார் விசாரணை..!

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும்…

‘சாட்டை ரெடி!’ முதல் அடி யாருக்கு மருது அழகுராஜ் கேள்வி?

தமிழகத்தில் வெளிவரும் முன்னணி நாளிதழில் இன்றைய முக்கியச் செய்தியாக ‘சாட்டை’ ரெடி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியில், ‘அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க.விடம் சில ஒன்றியச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் விலை போயிருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு…

அழகிகளை அடைத்து வைத்து விபசாரம்! கோவாவில் பதுங்கிய ரவுடி கைது!

புதுச்சேரி உப்பளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த வழக்கில் கோவாவில் பதுங்கியிருந்த ரௌடி ஐயப்பனை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலியார்பேட்டை காவல் துறையினர்…

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சறுக்கும் பா.ஜ.க.!

தமிழகத்தில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில், கர்நாடகாவிலும் பா.ஜ.க.விற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. ‘‘300 பெண்களை பலாத்காரம் செய்து 3000 ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும்…