தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பெருமால் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டம் என தகவல் தெரிவித்துள்ளனர்.