ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது. அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.
இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.