சிவகாசி அருகே எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளி மாணவனுடன் உல்லாசமாக இருந்த டியூசன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசன் எடுத்து வருகிறார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாளடைவில் மாணவனின் பெற்றோருக்கு தெரிவயவந்ததை அடுத்து டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் டியூசன் ஆசிரியை மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
பொறுமை இழந்த மாணவனின் பெற்றோர் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.