கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பளார் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தான். அந்தளவிற்கு தேர்தல் வியூகமும், விட்டமின் வியூகமும், வாங்கிய சத்தியமும் அவருக்கு கைகொடுத்தது.

இந்த நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.ஸை அவரது மகன்கள் கரை சேர்த்து விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடைத்த ரிசல்ட் ரொம்ப மோசமாக இருக்கிறது.

இது பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம்.

‘‘சார், நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார் ஓபிஎஸ். இது போக இன்னும் நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலா பழ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு ஓபிஎஸ்சுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பது ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரே மாதிரி இரண்டு சின்னமும் இருப்பதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்படலாம். மற்றவர்களுக்கு வாளி, டம்ளர் மற்றும் புளி சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் முடிந்திருக்கும் சூழலில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஓபிஎஸ்சிடம், அவரது ஆதரவு அணி சீனியர்கள் பேசியிருக்கிறார்கள். தேர்தல் எப்படி அண்ணே போச்சு.. திருப்தியா.. நமக்கு சாதகமாக ரிசல்ட் இருக்குமா என்றெல்லாம் கேட்டுள்ளனர்

குறிப்பாக, ‘திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கட்சியினரை அழைத்து வாக்குப்பதிவு நிலவரம் பற்றி விசாரித்திருக்கி றார்கள். நாமும் அதேபோல, கட்சியினரை அழைத்து ஆலோசிக்க வேண்டும்’ என சொல்ல, ‘போட்டியிட்டது நான் மட்டும் தான். இதில் யாரை அழைத்து விசாரிக்க வேண்டும் ? ஆலோசிக்க வேண்டும் ?’ என்று ஓபிஎஸ் திருப்பிக் கேட்டிருக்கிறார். அதற்கு சீனியர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இதனை ஒருவருக்குள் ஒருவர் பகிர்ந்துகொள்ளும் அவர்கள், ‘ஓபிஎஸ்சுக்கு என்னாச்சு? பட்டும் படாமலே பேசுறார். ஒரு வித கவலையாக இருக்கிறாரே?’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேர்தல் வேலைக்கு செலவு செய்யும் பொறுப்பை தனது மகன்களிடம் கொடுத்திருந்தார் ஓ.பி.எஸ்..

ஆனால், அவர்கள் செலவு செய்யவே இல்லையாம். அதுவும் தேர்தல் செலவுக்களுக்கென அவர் கொடுத்த பணத்தைத்தான் செலவு செய்திருக்கிறார்கள். அவர்கள் சொந்த பணத்தை எடுக்கவே இல்லையாம். அதுவும், தொகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகளை தனக்கு ஆதரவாக வளைத்து வைத்திருந்தார் ஓபிஎஸ். கடைசி 2 நாளில் அதிமுக நிர்வாகிகளை கவனிப்பதாகச் சொல்லியிருந்திருக்கிறார். அதனை செட்டில் செய்யச் சொல்லி மகன்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.

ஆனால், அவர்களோ தங்களிடம் பணம் இல்லை என சொல்லிவிட்டார்களாம். இது ஓபிஎஸ்சை சங்கடப்படுத்தியிருக்கிறது. எவ்வளவு செலவு செய்தாலும் அப்பா ஜெயிக்க மாட்டார்னு பையன்கள் நினைத்தார்களோ என்னவோ பணம் இல்லைன்னா சொல்லிட்டாங்க. இதுதான் அவரது மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் யார் பேசினாலும் மனம் விட்டு ஓபிஎஸ் பேசவில்லை. கவலையாகவே இருக்கிறார்’’ என்று பின்னணிகளை விவரிக்கி றார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், அண்ணாமலை சொன்னது போல் டி.டி.வி.தினகரனிடம் அ.தி.மு.க. சென்றாலும் செல்லுமே தவிர, ஓ.பி.எஸ்.ஸிடம் போகாது என்பதும் அவருக்கு மேலும் வருத்தத்தை உண்டு பண்ணியிருக்கும் என்கிறார்கள்!

அரசியல்ல இறங்கிட்டாலே ‘வாரியிறைத்தால்’ தானே ஜெயிக்க முடியும்… இந்த ஃபார்முலாவை எப்போது புரிந்துகொள்வார் ஓ.பி.எஸ்.?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal