தமிழகத்தில் வெளிவரும் முன்னணி நாளிதழில் இன்றைய முக்கியச் செய்தியாக ‘சாட்டை’ ரெடி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்த செய்தியில், ‘அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க.விடம் சில ஒன்றியச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் விலை போயிருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் சென்றிருப்பதாகவும், வாக்குப் பதிவு முடிவுகள் வெளியான பிறகு பூத்வாரியாக கணக்கெடுத்து நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும்’ வெளியாகியிருக்கிறது.

அதாவது, அ.தி.மு.க.வில் மாஜிக்கள், மா.செ.க்கள், முன்னாள்கள் என பலர் இருந்தும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட யாரும் விரும்பவில்லை. இதனால், புதியவர்களுக்கு ‘வாங்கியதை வாங்கிக்கொண்டு’ சீட் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி! பலர் போட்டியிட முன்வராததால் ஏற்கனவே கோபத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி சிலர் தி.மு.க.விடம் விலைபோனது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால்தான், தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் , ‘சாட்டை ரெடி’ என்று வெளியான செய்திக்கு ‘அடிக்கு உரியவர் அவரே’ என தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அடிக்கு

உரியவர்

அவரே

திமுக மகிழ அதிமுக வை உடைத்தது
யார்..?

அதே திமுக மகிழ மகிழ கூட்டணியை சிதைத்தது யார்..?

நிதியை வைத்து கட்சியின் விதிகளை
திருத்தியது யார்..?

ஒற்றைத் தலைமை நானாக இருந்தால்
கொத்தோடு பறிப்பேன் என கூவியது யார்..?

பாசப் பேரியக்கத்தை பைனானாஸ் கம்பெனி ஆக்கியது யார்..?

தனவந்தர்களை தேடிப்பிடித்து பலவந்தமாய் வேட்பாளர் ஆக்கியது யார்..?

ஒன்பது தேர்தல்களாக கட்சியை ஊமக்குத்து வாங்க வைத்தது யார்..?

ஆக.. சாட்டையடி வாங்க வேண்டிய சண்டாளன் எடப்பாடியும் அண்ணாரது துதிபாடிகளும் தானே..!

என்ன நாஞ் சொல்றது…’’ என தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியிருக்கும். குறிப்பாக 15 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.

ஆனால், ஆரம்பத்தில் மோடியுடன் இணக்கமாக இருந்துவிட்டு, பின்னர் மோடி எதிர்ப்பை எடப்பாடி எடுக்க காரணம் தி.மு.க.வுடன் மறைமுகமாக கூட்டு வைத்திருப்பதுதான் என்று இப்போது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், ‘கொடநாடு விவகாரத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறார்’ என்று ஆரம்பித்தில் இருந்து சொல்லி வருபவர் மருது அழகுராஜ்தான்..!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal