Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆயிரம் ரூபாய் விண்ணப்பம்…
முதல்வரின் புகைப்படம்..!
கொந்தளிக்கும் அன்புமணி..!

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடியால், இதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்பத்தை தி.மு.க.வினர் சில குடும்பங்களுக்கு…

‘காதலர்கள் போல தனியா போங்க..!’
கட்சியினருக்கு துரைமுருகன் அட்வைஸ்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கும்பலாக சென்று ஓட்டுக்கேட்பதைவிட, காதலர்களை போல தனித்தனியாக சென்று ஓட்டு சேகரிக்கும்படி அமைச்சர் துரைமுருகன் கட்சியினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் குடியாத்தத்தில் நடந்தது. இதில், நீர்…

இளம் தலைமுறையை கெடுத்து சம்பாதிக்க வேண்டுமா..?

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைபடம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் சமுதாயத்தில் வளரும் இளைஞர்களை கெடுக்கும் விதத்தில் அக்கிரமங்களுக்கு முன்னுதாரணமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும் இலக்கியவாதியும் ஆன கரிகா பதி…

கோவையில் விதிமீறுகிறதா தி.மு.க..?
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்பம்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் நகர்ப்புறத் தேர்தலில் கோவை மாநகராட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கோவையில் மட்டும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான…

தி.மு.க. வேட்பாளர்
மாரடைப்பால் மரணம்!

மாரடைப்பால் தி.மு.க. வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்தததுதான், அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.…

‘போட்டி’ வேட்பாளர்கள்
56 பேர் தி.மு.க.விலிருந்து நீக்கம்!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை உடன்பிறப்புக்களை கொஞ்சம் ஆட்டம் காண வைத்திருக்கிறது! இது தொடர்பாக…

‘நீட் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!’ -கனிமொழி எம்.பி., உறுதி

‘தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர்ந்து தி.மு.க. போராடும்’ என கனிமொழி எம்.பி., தெரிவித்திருக்கிறார்! கானொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் பிரச்சாரம், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒருபுறம் பிரச்சாரம், கனிமொழி எம்.பி.,…

அலுவலகம் – வீட்டிற்கு
வாடகை கட்டாமல்
இருக்கும் சோனியாகாந்தி!

தமிழகத்தின் உச்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்பத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும், சோனியாகாந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தாமல்…

அ.தி.மு.க.வில் ஐக்கியமாகும்
அ.ம.மு.க. முக்கிய புள்ளிகள்!

அ.தி.மு.க. மனக்கசப்பு ஏற்பட்டபோது சில முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் பின்னே அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் ‘நலன்’ கருதியும், அ.தி.மு.க.வை ‘மீண்டும் கைப்பற்றவும்’ அ.ம.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஆரம்பகால கட்டத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், டி.டி.வி.யின் போக்கு பிடிக்காததால், அமமுகவில்…