அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணாம்பட்டி ஊராட்சிக்கு செல்கிறார். பின்னர் அங்குள்ள கோரணம்பட்டி கஸ்பா பகுதியில் கட்சி கொடியேற்றி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து 4 மணிக்கு வெள்ளாளபுரம் ஊராட்சி மோட்டூரிலும், 4.30 மணிக்கு கோணசமுத்திரம் ஊராட்சி கன்னியம்பட்டியிலும் கொடியேற்றுகிறார்.

மாலை 5.15 மணிக்கு புதுப்பாளையம் ஊராட்சி கஸ்பா பகுதியிலும், 6 மணிக்கு சமுத்திரம் ஊராட்சி கஸ்பா பகுதியிலும், 6.45 மணிக்கு வெள்ளாளபுரம் ஊராட்சி சின்னப்பம்பட்டி மாரியம்மன்கோவில் அருகிலும் கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து 23-ந் தேதி மாலை 3.15 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டியிலும், 4 மணிக்கு காவடி காரணூர் பகுதியிலும், 5 மணிக்கு வெள்ளக்கல்பட்டி பகுதியிலும், 6 மணிக்கு எட்டிக்குட்டை மேடு பகுதியிலும் கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களும் திரளாக பங்கேற்கிறார்கள். இதையொட்டி கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் கொடி தோரணங்கள் கட்டி எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal