சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.