இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ‘கீ’ படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal