இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘புராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு ‘கல்கி 2898- ஏடி’ (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் கமலின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நெகடிவ் ரோல் இல்லாமல் பாசிட்டிவ் ரோல் கிடையாது. ஒரு படத்திற்கு நெகடிவ் ரோல் முக்கியமானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal