Month: February 2025

முதல்வர் தொகுதியில் முறைகேடுகள்! பாஜக ‘பகீர்’ குற்றச்சாட்டு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக பா.ஜ.க. பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறது. தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெரியார் நகர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், தவறான சிகிச்சை…

மக்களை ஏமாற்றிய எடப்பாடி! திண்டுக்கல்லார் ‘திடுக்’ தகவல்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கமாட்டார்கள். காரணம், உளறினால் பதவி பறிபோய்விடும். அ.தி.மு.க. சார்பில் அப்போது நடக்கும் பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு…

‘சோளக்காட்டில் வச்சு கற்பழிச்சேனா?’ சீமான் சர்ச்சை பேச்சு!

தமிழக அரசியல் களத்தில் சீமான், விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நேற்று, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த நிலையில்தான், ‘‘என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு…

சென்னையில் அமலாக்கத்துறை ‘ஆபரேஷன்’!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராகவன். இவர் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ சாதனங்களை கமிஷன் அடிப்படையில் வாங்கி கொடுப்பவர். இவர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

‘தில்’ பிரவீன் ராஜேஷ்! ‘திடுக்’ பின்னணி..?

சென்னை நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் சீமான் வீட்டிற்குள் துணிச்சலாக புகுந்து அவரின் காவலாளியை கைது செய்துள்ளார். காவலாளி கையில் துப்பாக்கி இருக்கும் போதே, துப்பாக்கியின் ட்ரிக்கர் அருகே காவலாளி கை இருக்கும் போதே துணிச்சலாக உள்ளே புகுந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர்…

மீண்டும் மணல் கொள்ளை! துரைமுருகன் பதவி விலக பாஜக கோரிக்கை!

‘‘சட்ட விரோத மணல் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘தமிழகத்தில்…

இந்தி திணிப்பு! அன்றே சொன்ன அண்ணா! பூங்கோதை ஆவேச பேச்சு!

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு இந்தி திணிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் இயக்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியதுதான் அனைவரின்…

அனைத்துக் கட்சி கூட்டம்! த.வெ.க.வுக்கு அழைப்பு!

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு…

தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் பிரதமருக்கு கடிதம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 700 பேர் கடிதம் எழுதியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளார். இவர்,…

‘கெட் அவுட்’ கையெழுத்துடன் தவெக 2ம் ஆண்டு விழா!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் ‘தளபதி’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் தொடங்கியுள்ளது. முதலில் மேடைக்கு வந்த விஜய் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மேடையில் வைக்கப்பட்டிருந்த ‘கெட் அவுட்’ பேனரில் கையெழுத்திட்டார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக்…