சென்னை நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் சீமான் வீட்டிற்குள் துணிச்சலாக புகுந்து அவரின் காவலாளியை கைது செய்துள்ளார். காவலாளி கையில் துப்பாக்கி இருக்கும் போதே, துப்பாக்கியின் ட்ரிக்கர் அருகே காவலாளி கை இருக்கும் போதே துணிச்சலாக உள்ளே புகுந்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் அவரை கைது செய்துள்ளார்.

நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன் ஆவார். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர். அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று போலீஸ் பணிக்கு இவர் வந்தார்.

சட்ட ஒழுங்கில் முக்கியமான போலீஸ் அதிகாரியாக, மிகவும் நேர்மையான, துணிச்சலான அதிகாரியாக பார்க்கப்படுகிறார். முக்கியமாக நீலாங்கரை பாதுகாப்பு வழங்குவதிலோ சிக்கலான இடம் என்றாலும் அதை துணிச்சலாக திறம்பட செய்து வருகிறார். இவருக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர்தான் சீமான் வீட்டில் கிழிக்கப்பட்ட சம்மன் குறித்து விசாரிக்க சென்றார். அப்போது சீமான் காவலாளி அவரை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளார்.

இதை பற்றி கேட்டதும் உடனே ஜீப்பை எடுத்துக்கொண்டு சீமான் வீட்டிற்கே சென்று கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ். தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கேட்டதும்.. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார்.

சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார் 2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷின் துணிச்சலான செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal