தமிழக அரசியல் களத்தில் சீமான், விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நேற்று, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இந்த நிலையில்தான், ‘‘என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுகிறீர்களே?’’ என மகளிரணி நிர்வாகிள் முன்னிலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

தருமபுரியில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ‘‘என்ன பாலியல் வழக்கு? அந்த பொண்ணு யாரு, அவங்க சொல்லிட்டா அது உண்மையாகிடுமா, குற்றமாகிடுமா, ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்.

ஆனால் போலீஸார் விசாரிக்க வேண்டுமல்லவா, விசாரிக்காமலேயே உறுதி செய்துவிட்டால் என்ன அர்த்தம்? என்னமோ வயசுக்கு வந்ததும், குச்சியில் இருந்த புள்ளைய சோள காட்டுல வச்சி கற்பழிச்ச மாதிரி எல்லாரும் கதறிக் கிட்டு இருக்கீங்க.

நான் அரசியல்வாதியாக இருப்பதால் என் மீது பாலியல் பழி சுமத்துகிறார்கள். இதே நான் சாதாரண இயக்குநராக இருந்திருந்தால் என் மீது இப்படியெல்லாம் வழக்கு போட்டு பேசியிருப்பீர்களா? ஒரு முழு அதிகாரத்தையும் என் மீது திமுக அரசு காட்டுகிறது என்றால் என்னை பார்த்து நடுங்கிவிட்டது என்று அர்த்தம்’’ என ஆதங்கமாகப் பேசினார்.

விஜயலட்சுமி விவகாரத்தில் நீதிமன்றமும் கண்டிப்பு காட்டியிருப்பதால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் எந்நேரமும் கைததானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal