‘‘சட்ட விரோத மணல் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘தமிழகத்தில் தொடரும் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகத்தினரும் செயல்பட்டு தமிழகத்தின் மண் வளம் சுரண்டப்படுவதால், நிர்வாக சீர்கேட்டிற்கு முழு காரணமாக விளங்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஒருவேளை மூத்த ஊழல் அமைச்சரை நீக்குவதற்கு முதல்வருக்கு தயக்கம் ஏற்பட்டால், மனசாட்சியுடன் எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மணல் கொள்ளை தமிழகத்தில் இரவும் பகலாக நடப்பதற்கு காரணமாக இருந்து, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மணல் வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க தவறிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று தானே பதவி விலக வேண்டும்.

தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை திருடுபவர்களுக்கு, கனிம கொள்ளையர்களுக்கு துணை போவதால் தமிழக அரசு அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன், உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.

தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக லாரிகளில் மணல் கடத்தல் போடுகிறது. மிக முக்கியமாக மணல் கொள்ளை நடக்கும் பகுதி அருகில் முடியனூர் மற்றும் எட்டு வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும் இடத்தின் அருகிலேயே பல மீட்டர் ஆட்டத்திற்கு பள்ளம் தோண்டி மணல் கடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டிணம் ஏரியில் இரவு பகலாக பொக்லைன் இயந்திரம் வாயிலாக கிராவல் மண் தோண்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுகிறது.இதனால் தென்பெண்ணையாற்றில் பல ஆண்டுகளாக செயல்பட்ட சட்டவிரோத மணல் குவாரிகளால் கட்டாம் தரையான ஆற்றுப்பகுதி இயற்கை அன்னையின் அருளால் கடந்த நவம்பர் மாதம் பின்ச் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றில் மணல் குவிந்து நிலத்தடிநீரை இயற்கை அன்னை தனக்குத் தானே திட்டமாக, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் இயற்கையின் சமநிலைப்பாடு துவங்கிய சில மாதத்திலேயே பெண்ணையாறு மீண்டும் கட்டாந்தரையாகி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.*

அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு கடற்கரை பகுதியில் பொக்லைன் இயந்திரங்களால் முறைகேடாக மண் அள்ளப்பட்டு ஏராளமான லாரிகளில் தினமும் ஆயிரக்கணக்கான உப்பளங்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லாரி லோடுமன் 5000 முதல் 7000வரை ஏறத்தாழ 10 ஆயிரம் உப்புளங்களுக்கு சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. இதனால் ஏறத்தாழ தமிழக அரசுக்கு 200 கோடி முதல் 300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகை மட்டும் தொலைக்காட்சி ஊடகங்களில் படத்துடன் செய்தி வெளிவந்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறை அமைச்சர் நீர்வளத் துறை நிர்வாகம், ஒட்டுமொத்த தமிழக அரசு இயந்திரமும் கண்டுகொள்ளாமல்கனிம வள கொள்ளையர்களுக்கு துணை போவது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த காலங்களில் மதுரை,திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணல் கொள்ளை நடப்பதை வெட்ட வெளிச்சமாக ஏற்கனவே ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்த மாவட்டங்களை தொடர்ந்து தற்பொழுது கள்ளக்குறிச்சியிலும் தூத்துக்குடியிலும் சட்டவிரோத மணல் கொள்ளை தலை விரித்து ஆடுகிறது.
சட்டவிரோத மணல் கொள்ளை குறித்த தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை மீறி தற்போது தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்து வருவது ஒரு ஆபத்தான அறிகுறி மற்றும் தமிழகத்தில் மிக மோசமான சட்ட மீறல் நடைபெறுவதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
தமிழன்னையின் கால்களை வெட்டி ரத்தம் குடிக்கும் மணல் கொள்ளையர்களை தமிழக முதல்வர் தண்டிக்காதது ஏன்? மணல் கொள்ளையால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்கள், உப்பளங்கள் பயனற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?

ஏற்கனவே தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட ஊழல் ஊழல் பணம் ரூ.4,730 கோடி அளவுக்கு பல்வேறு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி அவர்களிடமும் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தமிழக காவல்துறையும், தமிழக அரசும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் மணல் கொள்ளையும் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. ’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal