தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் ‘தளபதி’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் தொடங்கியுள்ளது. முதலில் மேடைக்கு வந்த விஜய் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மேடையில் வைக்கப்பட்டிருந்த ‘கெட் அவுட்’ பேனரில் கையெழுத்திட்டார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியலில் நுழைந்தார். இக்கட்சியின் 2ம் ஆண்டு விழா, மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று (பிப்.,26) காலை 9.45 மணிக்கு துவங்கியது.

இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் த.வெ.க. கட்சியினர் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்றைய தினம் விஜயை சந்தித்து, விழாவில் பேசக்கூடிய தகவல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மாநாட்டிற்கு பிறகு விஜய் மக்களை நேரில் சந்திக்கவில்லை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் , 2ம் ஆண்டு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில், மும்மொழி கொள்கைக்கு எதிராக விஜய் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணையவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal