தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மிக்ஜாம் நிதியான 285 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியான 397 கோடி ரூபாயில் 160 கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதனிடையே கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக 3,454 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு மழை நிவாரணமாக ரூ.276  கோடி மத்திய அரசு அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் என மொத்தம் தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal