நடிகர் விஜய், நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நெக்லஸை பரிசாக கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவருமே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய்யும் திரிஷாவும் முதன்முதலில் ஜோடியாக நடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

கில்லிக்கு பின்னர் திருப்பாச்சி, குருவி, ஆதி என அடுத்தடுத்து விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, அதன்பின்னர் அவருடன் சுமார் 15 ஆண்டுகளாக ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் விஜய்யும், திரிஷாவும் மீண்டும் லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்யின் மனைவியாகவும், 2 குழந்தைகளுக்கு தாயாகவும் திரிஷா நடித்திருந்தார்.

பொதுவாகவே சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்கள் அதிக படங்களில் ஜோடியாக நடித்தால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். அந்த வகையில் விஜய், திரிஷாவை வைத்தும் ஏராளமான கிசுகிசுக்கள் வந்தன. இதனால் விஜய்யின் குடும்பத்திலும் விரிசல் ஏற்பட்டு அவரது மனைவி சங்கீதா அவரைப்பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. சமீபகாலமாக இந்த சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

பிரபல சினிமா பத்திரிகையாளரான பாண்டியன், சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய் – திரிஷா பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை திரிஷா வீட்டில் ஐடி ரெய்டு நடந்தபோது ரூ.1 கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்று சிக்கியதாம். கணக்கில் வராத அந்த நெக்லஸ் பற்றி ஐடி அதிகாரிகள் திரிஷாவிடம் விசாரித்தபோது, அந்த நெக்லஸை நடிகர் விஜய் தனக்கு பரிசாக கொடுத்ததாக திரிஷா கூறியதாக பாண்டியன் கூறி இருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal