The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மனதோடு விளையாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதை தொடர்ந்து அரவான், பரதேசி உள்ளிட்ட படங்களில் சாய் தன்ஷிகா நடித்தார். தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானார். நல்ல கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும், சாய் தன்ஷிகாவுக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமர் போட்டோக்களை அவர் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வெறும் சட்டை மட்டும் அணிந்து, நடிகருடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் அவர் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.