Month: November 2023

இளைஞரணிக்கு 5 எம்.பி. சீட்! உதயநிதி உறுதி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணிக்கு 5 எம்.பி. சீட்களையாவது ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இது பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘ திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில்…

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாது. வடகிழக்கு…

இசை மேதையின் வரலாற்றைத் திரைப்படம்! இளையராஜாவாக நடிகர் தனுஷ் !!

மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய…

ஆவண மோசடி! ககன் போத்ராவுக்கு மீண்டும் ‘குண்டாஸ்’!

பிரபல சினிமா பைனான்சியர் முகந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா போலி ஆவண மோசடியில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே குண்டாஸில் சிறைக்கு சென்றிருக்கிறார். இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், ‘…

இருக்கை விவகாரம்! 20 முறை கடிதம்! சபாநாயகருக்கு நோட்டீஸ்!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என தனித்து…

அதிமுக ஐடி விங்கிற்கு எடப்பாடியின் தீபாவளி கிஃப்ட்!

ஆளும் தி.மு.க. அரசின் குறைகளை உடனுக்குடன் தோலுரித்துக்காட்டும் அ.தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி பழனிசாமி தீபாவளி கிஃப் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த…

‘ஜிகர்தண்டா 2’ படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!

ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்…

ஆன்லைன் சூதாட்ட தடை அரசாணை செல்லும்: சென்னை ஐகோர்ட்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக…

கைத்தறி கண்காட்சியில் சேலைகளை திருடிய கும்பல்!

சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கைத்தறி கண்காட்சியில் ரூ. 72 லட்சம் மதிப்பிலான 10 பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிப்பு  கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்போது பெண்கள் சிலர் கூட்டமாக…

தீபாவளி திருநாள்! தீ விபத்துக்கு சிறப்பு வார்டுகள்!

‘தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள்…