தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தன. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal