ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ‘மாமதுர’ பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.