Month: November 2023

மணல் குவாரிகள்! ‘ED’க்கு எதிராக ஆட்சியர்கள் வழக்கு!

சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நவ.27-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.…

குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு!!

மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் அக்.29முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தில் டிசம்பருக்குள் மேலும் 10 ஆயிரம் மருத்துவ…

ஆளுநரின் அதிகாரங்கள்! முதல்வரின் அடுத்த டார்கெட்!

ஆளுநர் மற்றும் அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது அடுத்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசவுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்…

‘த்ரிஷா மன்னித்துவிடு..!’ மனமுருகிய மன்சூர்..!

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே…

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறை சம்மன்!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான…

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கதிர் ஆனந்த்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்கிறார். அடுத்தடுத்த அமைச்சர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் வந்திருப்பதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2019ம்…

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி கமல்  ஒரே படப்பிடிப்பு தளத்தில்!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

விஜயகாந்த் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 18-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே மூச்சு விடுவதில் அவருக்கு லேசான சிரமம் ஏற்பட்டது. இதற்காகவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற திங்கட்கிழமை (27-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலக் கல்லூரி வளாகத்திற்கு சென்று வி.பி.சிங்…