மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal