சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற திங்கட்கிழமை (27-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலக் கல்லூரி வளாகத்திற்கு சென்று வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, வி.பி.சிங் மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக கலைவாணர் அரங்கில் தலைவர்கள் வாழ்த்தி பேசும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal