Category: அரசியல்

நேற்று கள்ளக்குறிச்சி… இன்று திருவள்ளூர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின்…

பா.ஜ.க.விக்கு சாதகமான சூழல்! அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்..!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அரங்கேறும் அவலங்களுக்குக் காரணம் ‘அறிவாளி ஆடிட்டிர்’ ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ‘அடக்கமான’ தலைவரைப் பார்த்து ‘ உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று நான் கேட்டேன்’ என்பதை…

எடப்பாடி எதிராக ஓ.பி.எஸ். அதிரடி வியூகம்!

தமிழகம் முழுவதும் மா.செ.க்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று 14 மா.செ.க்களை நியமித்திருக்கிறார். இன்னும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க…

ஆன்லைனில் மாணவர்கள் குறை கேட்பு… அமைச்சரின் அதிரடி திட்டம்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்ட சபையில் பேசியதோடு, அதனை படிப்படியாக நடைமுறைப் படுத்தியும் வருகிறார். அதே போல், பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான திட்டங்களை…

மோடியின் ‘குட்புக்’கில் அண்ணாமலை..!

தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தூக்கத்தை அவ்வப்போது கெடுத்து வருகிறார் அண்ணாமலை. அதாவது, இதற்கு முன்னர் ஜெயலலிதா இருந்தபோது கூட, இந்தளவிற்கு ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் ‘குட் புக்’கில் அண்ணாமலை இடம் பிடித்திருப்பது தமிழக பா.ஜ.க.வினரை மகிழ்ச்சியில்…

டெல்லி பயணம்… எடப்பாடி எடுத்த திடீர் வியூகம்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார…

முடக்க முயற்சிக்கும் ஓ.பி.எஸ்… முடங்குமா அ.தி.மு.க..?

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தனக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் முடக்கும் முயற்சியில் இறங்கினார் ஓ.பி.எஸ்., அதாவது, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. ஆட்சி கவிழுவதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்தார். அடுத்தது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வின்…

கனியாமூர் மாணவி… கண்ணீர்மல்க நல்லடக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

வெளிநாட்டு சொகுசு கார்… இறக்குமதி செய்த கே.என்.நேரு?

தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அமைச்சர்கள் ‘குறுக்கு வழயில்’ சென்றுவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். அரசியல் கட்சியினர் தலையீடுகள் இன்றி, பொதுமக்கள் வியக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! சமீபத்தில் நடந்து…

ஆர்.பி.உதயகுமாருக்கு பதவி… திசை மாறும் செல்லூரார்..!

ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியதால், ஓ.பி.எஸ். பக்கம் திசைமாறும் முடிவை செல்லூர் ராஜூ எடுத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன! மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை…