தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் என 2 நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது.