வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், உடல்நலக் குறைவால் இன்று (அக்.,12) காலமானார்.

கடந்த 2001 முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர் கோவை தங்கம். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணை தலைவராக இருந்தவர். 2011ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் கோவை தங்கம். பின்னர் 2021ல் வால்பாறை தொகுதியை அதிமுக கூட்டணியில் இருந்த தாமக.,வுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக களம் இறங்குவதாக அறிவித்தார்.

பின்னர் தன் முடிவை மாற்றி திமுக.,வில் இணைந்தார். அதன்பிறகு, வால்பாறை தொகுதி இந்திய கம்யூ.,க்கு ஒதுக்கப்படவே, எந்த வேட்பாளரிடம் (ஆறுமுகம்) 2011ல் தோற்றாரோ அதே வேட்பாளருக்காக பிரசாரம் செய்தார் கோவை தங்கம். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal