தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்ததாக சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தான் வட சென்னை.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படத்தில் ஐஸ்வர்யா பத்மா என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதாவது பத்மா கதாபாத்திரத்திற்கு எனக்கு முன்பு இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். மூன்றாவது ஆள் தான் நான். வெற்றி சார் ஆடிஷன் வைத்து, உனக்கு தெரிந்த எல்லா அசிங்கமான வார்த்தைகளும் பேச வேண்டும் என்றார். அப்படி பேசினால் தான் உங்களின் கதாபாத்திரம் சரியாக வரும் என்றார்.
எல்லா கடவுள்களையும் கும்பிட்டு பயங்கரமா, அசிங்க அசிங்கமா பேசினேன். நெருக்கமான காட்சிகளில் உங்களின் சௌகரியம் தான் முக்கியம் என்றார் வெற்றி சார்.
உங்களுக்கு சௌரியம் இல்லை என்றால் வேண்டாம் என்றார். படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் இருந்தது. எனக்காகவே பல காட்சிளை வெற்றி சார் எடுக்கவில்லை.
ஐஸ்வர்யாவுக்கு சௌகரியமாக இருப்பதை மட்டும் ஷூட் செய்யலாம் என்று தனுஷும் தெரிவித்தார். நான் மோசமான நடிகையா என்று தனுஷ் சாரிடம் அடிக்கடி கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது,இல்லை ஐஷு. நான் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். உங்களின் நடிப்பு பிடித்திருக்கிறது. வட சென்னை 2 படத்தில் பத்மா கதாபாத்திரம் டிரேக் மார்க்கா இருக்கணும் என்றார் என தெரிவித்தார்.