நடிகை ஊர்வசியின் முதல் கணவர் மனோஜ் கே ராஜன் தினமும் அவரை குடிக்க சொல்லி டார்ச்சர் செய்ததோடு மதுவுக்கும் அடிமையாக்கிவிட்டாராம்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஊர்வசி. இவருடைய ஒரிஜினல் பெயர் கவிதா ரஞ்சனி. சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என மாற்றிக் கொண்டார். இவருக்கு கலா ரஞ்சனி மற்றும் கல்பனா என இரு சகோதரிகள் உண்டு. அவர்கள் இருவருமே ஊர்வசியை போல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளனர். அதேபோல் ஊர்வசியின் இரண்டு சகோதரர்களான கமல் ராய் மற்றும் இளவரசன் ஆகிய இருவரும் ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்துள்ளனர்.
ஊர்வசியின் சகோதரர் இளவரசன், தன்னுடைய 26 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாராம். அதை போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்வசியின் சகோதரி கல்பனா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஊர்வசி, பின்னர் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார். மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த ஊர்வசியின் நடிப்பை பார்த்து வியந்த பாக்கியராஜ் அவரை தமிழில் தான் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கடந்த 1983 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டதோடு ஊர்வசிக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
பின்னர் கமலுடன் இவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் படமும் ஹிட்டானதால் ராசியான ஹீரோயினாக உருவெடுத்தார் ஊர்வசி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டிய ஊர்வசி, ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
சினிமாவில் வெற்றிநடை போட்டு வந்த ஊர்வசிக்கு இல்லற வாழ்க்கை சரிவர அமையவில்லை. முன்னணி நடிகையாக இருக்கும் போதே மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி. இவரின் கணவரும் ஒரு நடிகர் தான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணமான 8 ஆண்டுகளிலேயே முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் ஊர்வசி.
விவாகரத்துக்கான காரணத்தை வெளியிடாமல் இருந்து வந்த ஊர்வசி முதன்முறையாக அதுபற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில், தான் குடிக்கு அடிமையாக காரணமே தன்னுடைய முதல் கணவர் மனோஜ் கே ஜெயன் தான் என்று கூறி இருக்கிறார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் தன்னை வற்புறுத்தி குடிக்க வைத்ததாகவும் அதனால் தான் மதுவுக்கு அடிமையானேன் என்றும் கூறிய ஊர்வசி, அதுதான் தங்களது விவாகரத்துக்கும் காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார் ஊர்வசி.