தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி இந்தியளவில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் தற்போது ராம் சரணின் RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

மேலும் இப்படங்களை தொடர்ந்து வேள்பாரி நாவலை தழுவி பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த நாவலை திரைப்படமாக இயக்க ரைட்ஸ் எல்லாம் அவர் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரூ. 1000 கோடியளவில் உருவாகும் அப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

By Porkodi